How to Do Online Tatkal Reservation in Simple Steps: ரயில் பயணத்தை விரும்பாதவர்கள் இந்த உலகத்தில் யாரும் இருக்கு முடியாது. அந்தளவிற்கு, உன்னதமான அனுபவத்தை அளிக்கவல்லது ரயில் பயணங்கள். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பானதாகவும், அதே சமயம் வசதிகளை கொண்டதாகவும் உள்ளது ரயில் பயணம்.
ரயில் பயணம் சுகமாக அமைய வேண்டுமென்றால், அதிகம் கடினப்பட்டு ரயில் டிக்கெட்டை புக் செய்ய வேண்டும். ஏனென்றால், அந்தளவிற்கு ரயில் பயணத்திற்கு டிக்கெட் எடுப்பது என்று தற்போதைய நிலையில் பெரும் குதிரைக்கொம்பாகவே உள்ளது. கடைசி நேர ரயில் பயண திட்டமிடலுக்கு தட்கல் முறையிலான புக்கிங் நமக்கு கைகொடுக்கிறது. தட்கல் டிக்கெட் புக்கிங் எந்த நேரத்தில் துவங்குகிறது, எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பது குறித்து தெரிந்தவர்களால் மட்டும்தான், அதில் டிக்கெட் புக் செய்ய முடியும்.
இந்தியாவில், தட்கல் முறையில் டிக்கெட் புக்கிங் செய்யும் முறை, 1997ம் ஆண்டு நடைமுறைக்குவந்தபோதும், ஆன்லைன் முறையில் தட்கல் டிக்கெட் முன்பதிவு, சில ஆண்டுகளுக்கு முன்பே வந்தது. பயணம் துவங்குவதற்கு முதல்நாளிலேயே, தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்வது கடினம் என்று பலர் சொல்ல கேட்டிருக்கலாம். பின்வரும் முறையை பயன்படுத்தி எளிதாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்
How to Do Online Tatkal Reservation in Simple Steps: ஆன்லைனில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் வழிமுறை
1. IRCTC இணையதளத்திற்கு செல்லவும்
2. யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்யவும்
3. தட்கல் முறையில் ஒரு பிஎன்ஆர் நம்பரில் 4 டிக்கெட்களை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
4. பயணம் துவங்கும் இடத்தை தேர்வு செய்யவும்
5. பயண தேதியை தேர்வு செய்யவும்
6. பின் சப்மிட் பட்டனை அழுத்தவும்
7. தட்கல் கோட்டா பிரிவை தேர்வு செய்யவும்
8. Book now தேர்வு செய்து அன்றைய தினத்தின் ரயில்களை தேர்ந்தெடுக்கவும்
9. பெயர், வயது, பாலினம், இருக்கை முன்னுரிமை உள்ளிட்ட விபரங்களை நிரப்பவும்
10. கப்சாவை கவனமாக பதிவிடவும்
11. ஆன்லைன் முறையில் பணம் செலுத்தவும்
ரயில் பயணம் துவங்குவதற்கு ஒருநாள் முன்பே, தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். உதாரணத்திற்கு ஜூன் 12ம் தேதி பயணம் மேற்கொள்வதாக இருந்தால், 11ம் தேதி காலை 10 மணிமுதல் தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும்.
ஏசி ரயில்களில், காலை 10 மணிக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு துவங்கும்
ஏசி அல்லாத ரயில்கள் எனில், காலை 11 மணிக்கு தட்கல் முன்பதிவு துவங்கும்
தட்கல் முறையில் முன்பதிவு செய்யும் டிக்கெட்களை ரத்து செய்தால், பணம் திரும்ப கிடைக்காது.