திங்களன்று நடைபெற்ற கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், தெலுங்கு தேசம் கட்சியும் (டிடிபி) ஜன சேனா கட்சியும் (ஜேஎஸ்பி) 100 நாள் கூட்டுப் பிரச்சாரத்தில் களமிறங்க முடிவு செய்துள்ளன.
கூட்டத்திற்குப் பிறகு பேசிய நடிகரும், அரசியல்வாதியுமான ஜேஎஸ்பி தலைலர் பவன் கல்யாண், அடுத்த வருட தேர்தலுக்கு வியூகம் அமைப்பது குறித்து ஆலோசித்ததாகவும், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசாங்கத்தை வீழ்த்துவதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் நாயுடு கூறுகையில், ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசாங்கம் "மக்களின் குரலை நசுக்குகிறது" மற்றும் "போட்டி அரசியல் தலைவர்களை மிரட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது" என்றார்.
ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசாங்கத்தின் கீழ், சிறுபான்மையினர், ஓ.பி.சி மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கிருஷ்ணா மாவட்ட பகுதியில் வறட்சி ஆன சூழல் நிலவுகிறது என்றும் இது பற்றி அரசாங்கம் கவலைப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
அக்டோபர் 29 முதல் 31 வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் டிடிபி மற்றும் ஜேஎஸ்பி தலைவர்கள் பொதுக் கூட்டங்களை நடத்துவார்கள் என்று கட்சிகள் அறிவித்தன. நவம்பர் 1 முதல் தேர்தல் அறிக்கைகள் தயார் செய்ய மக்களின் ஆலோசனைகளைப் பெற வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்ய உள்ளனர் என்று கூறினார். மேலும், மாவட்ட அளவில் இருகட்சிகள் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
ராஜமகேந்திரவரத்தில் நேற்று நடந்த முதல் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், பவன் கல்யாண் மற்றும் தெலுங்கு தேசம் பொதுச் செயலாளர் நாரா லோகேஷ், ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் அட்சேன்நாயுடு, தலைவர்கள் யனமலா ராமகிருஷ்ணுடு, கேசவ், சத்யநாராயணா, சௌமியா, நிம்மலா ராம நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்
ஜனசேனா தரப்பில் நாதெண்டலா மனோகர், கே துர்கேஷ், பி நாயகர், வி மகேந்தர் ரெட்டி மற்றும் பி யாஷ்வினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க கேள்விக்கு மௌனம்
கல்யாணின் கட்சி ஏற்கனவே பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் உள்ளது. ஜெகனுக்கு எதிராக "மகா கூட்டணி" அமைக்க முயல்கிறார். செப்டம்பரில் நாயுடு கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ஜேஎஸ்பியும், டிடிபியும் 2024 தேர்தலில் ஒன்றாக போட்டியிடும் என்று பவன் கல்யாண் அறிவிப்பு வெளியிட்டார்.
ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யை நாங்கள் தனியாக எதிர்த்துப் போராட முடியாது. ஒய்.எஸ்.ஆர்.சி.பி-க்கு எதிரான இந்தப் போரில் பா.ஜ.கவும் என்னுடன் சேர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாஜக எங்களுடன் இணையும் என்று நான் இன்னும் நம்புகிறேன். பாஜக எந்த முடிவையும் எடுக்கவில்லை, ஆனால் நான் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்,” என்று கல்யாண் கூறினார்.
2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, 2018 ஆம் ஆண்டில், டிடிபி பா.ஜ.கவின் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது. மத்திய பா.ஜ.க அரசு ஆந்திராவை புறக்கணிக்கிறது என்றும் அதற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்றும் அப்போதைய முதல்வர் நாயுடு குற்றம் சாட்டினார்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/tdp-jana-sena-chalk-out-joint-campaign-plan-silent-on-bjp-question-8996900/
டிடிபி, ஜேஎஸ்பி மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி, வலிமைமிக்க ஒய்எஸ்ஆர்சிபிக்கு எதிராக ஒரு முனையில் இருக்கும் என்று கல்யாண் நம்புகிறார். டிடிபி, பாஜக கூட்டணியில் வெளியேறிய நிலையில், கல்யாணின் முன்மொழிவுக்கு பிறகு இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டசபைக்கு 2019 தேர்தலில், ஒய்எஸ்ஆர்சிபி 151 இடங்களைக் கைப்பற்றியது. தெலுங்கு தேசம் கட்சி 39 சதவீத வாக்குகளுடன் 23 இடங்களையும், ஜேஎஸ்பி 5.54 சதவீத வாக்குகளுடன் 1 இடத்தையும் பெற்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.