ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் செய்ததாக புகார் எழுந்த நிலையில் இன்று (செப்.9) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடைய ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்த நிலையில் ஆந்திரப் பிரதேச குற்றப் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி) அதிகாரிகளால் இன்று காலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்ய போலீசார் அதிகாலை 3.30 மணியளவில் நந்தியாலாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றனர். ஆனால் தெலுங்கு சேத கட்சியினர் கைது செய்ய விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் கைது செய்யக் கூடாது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காலை அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் விஜயவாடாவுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
வழக்குப் பதிவு
நாயுடு கைதைத் தொடர்ந்து ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் தெலுங்கு சேத கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெலுங்கு தேசம் கட்சி வழக்கறிஞர் கூறுகையில், நாயுடுவுக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளோம். உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கண்டறியப்பட்டதையடுத்து சந்திரபாபுவை சி.ஐ.டி போலீசார் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று கூறினார்.
நாயுடுவுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸின்படி, அவர் மீது சட்டப்பிரிவு 120பி (குற்றச் சதி), 420 (ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துக்களை வழங்குதல்) மற்றும் 465 (போலி செய்தல்) உள்ளிட்ட தொடர்புடைய ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஊழல் தடுப்புச் சட்டத்திலும் அவர் மீது சி.ஐ.டி வழக்குப் பதிவு செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“