ஆந்திராவில் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ மாவோஸ்டுகளால் சுட்டுக் கொலை!

Maoist Attack in Visakhapatnam : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டீல் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ கிடாரி மற்றும் ஒருவர் கொல்லப்பட்டனர். ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டிணம் மாவட்டம், அரக்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த தெலுங்குதேசம் கட்சி எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ். இவர்…

By: Updated: September 23, 2018, 07:39:41 PM

Maoist Attack in Visakhapatnam : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டீல் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ கிடாரி மற்றும் ஒருவர் கொல்லப்பட்டனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டிணம் மாவட்டம், அரக்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த தெலுங்குதேசம் கட்சி எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ். இவர் இன்று தன்னுடைய உதவியாளர், மற்றும் முன்னாள் எம்எல்ஏ எஸ். சோமா ஆகியோருடன் தொகுதிக்குச் சென்றுவிட்டு திரும்பினார்.

Maoist Attack in Visakhapatnam : தெலுங்குதேசம் எம்.எல்.ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ் சுட்டுக் கொலை :

அப்போது விசாகப்பட்டிணத்தில் இருந்து 125 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை கிராமமான துதாங்கி கிராமம் அருகே காரில் வந்த போது, எம்.எல். சர்வேஸ்வர ராவ் மீது மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ் கொல்லப்பட்டார். உடன் சென்ற உதவியாளரும் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் பலியான எம்எல்ஏ சர்வேஸ்வர ராவ் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சிக்கு மாறியவர். ஆந்திர அமைச்சரவையில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து கிடாரி சர்வேஸ்வரா ராவ் காத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்சி வகுப்பைச் சேர்ந்த கிடாரி சர்வேஸ்வர ராவ் கடந்த 2014-ம் ஆண்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் அரக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தெலங்கு தேசம் கட்சி வேட்பாளர் சோயாவை தோற்கடித்தவர். பின்னர் 2016-ம் ஆண்டு டிடிபி கட்சிக்கு சர்வேஸ்வர ராவ் மாறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Tdp mla kidari sarveswara rao among two shot dead by naxals in visakhapatnam

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X