அடேங்கப்பா! டீ விற்று மாதம் 12 லட்சம் சம்பாதிக்கும் லட்சாதிபதி வியாபாரி

இப்போதெல்லாம் 5,000 ரூபாய் சம்பளம் வழங்கும் வேலைக்கு அல்லோலப்படுகிறார்கள். அவ்வளவு ஏன்? அந்த வேலை கூட கிடைக்காமல் எவ்வளவு பேர் கஷ்டப்படுகின்றனர்.

இன்ஜினியரிங் படித்தவர்களே இப்போதெல்லாம் 5,000 ரூபாய் சம்பளம் வழங்கும் வேலைக்கு அல்லோலப்படுகிறார்கள். அவ்வளவு ஏன்? அந்த வேலை கூட கிடைக்காமல் எவ்வளவு பேர் கஷ்டப்படுகின்றனர்.

ஆனால், மஹராஷ்டிராவில் ஒருவர் டீ விற்று மாதந்தோறும் 12 லட்ச ரூபாய் சம்பாதித்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மஹராஷ்டிராவின் புனே நகரத்தில்தான் இந்த லட்சாதிபதி டீ கடைக்காரர் இருக்கிறார்.

நவ்நாத் என்பவரின் இந்த டீக்கடையின் பெயர் ‘யவ்லே டீ ஹவுஸ்’. இந்த டீக்கடை புனேவில் மிகவும் பிரபலமானது. ஏற்கனவே இக்கடைக்கு 3 கிளைகள் உள்ள நிலையில், வெளிநாடுகளிலும் கிளைகள் திறக்க திட்டமிட்டிருக்கிறார் நவ்நாத். நவ்நாத்தின் டீ கடையின் ஒவ்வொரு கொளையிலும், 12 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த டீ கடையால் அப்பகுதியில் உள்ள பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிட்டியிருக்கிறது. ”இந்த வியாபாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்”, என்கிறார் நவ்நாத்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close