Madhya Pradesh: Against all odds, tea seller’s daughter becomes IAF officer : 24 வயதான அனச்சல் கங்வால், டீ விற்பனை செய்து கொண்டிருந்தவரின் மகள் தற்போது இந்திய விமானப் படையில் ஃப்ளையிங் ஆஃபிசராக பணியில் சேர்ந்துள்ளார்.
Advertisment
இந்திய விமானப்படையில் தன்னுடைய பணியை துவங்கியுள்ள அனச்சலின் பயணம் மிகவும் எளிமையாக ஒன்றும் இருக்கவில்லை. கடந்த 25 வருடங்களாக போபாலில் டீ விற்பனை செய்து வரும் அவருடைய தந்தை, அனச்சலின் படிப்பிற்காக பணம் கூட சேர்த்து வைக்கவில்லை. ஆனாலும் கூட அனச்சலின் கனவுகளை பின்பற்றி செல்ல ஊக்குவித்தார்.
அனச்சல் விமானத்தை இயக்கியது எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மிகவும் பெருமைக்குரிய நிகழ்வுகளுள் ஒன்று. ஆனால் கொரோனா வைரஸ் பரவலை குறைக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடை காரணமாக எங்களால் துண்டிகலில் உள்ள ஏர் ஃபோர்ஸ் அக்காடெமிக்கு செல்ல இயலவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றார் அனச்சலின் தந்தை சுரேஷ். நீமுச் மாவட்டத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் தேநீர் கடை நடத்தி வருகிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
அனச்சலின் வெற்றி பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான். அனச்சல் தன்னுடைய சீருடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “மத்திய பிரதேசத்தை பெருமை அடைய வைத்த அனச்சல், நாட்டின் பெருமையை காக்க உயர உயர பறக்க போகிறார்” என்று பெருமைபட முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.
रौशन थी धरती तुझसे, अब रौशन होगा आसमां भी।
दुआओं पर परवाज करो, रौशन कर दो जहां भी।
अंधेरों को चीरकर फिर एक बेटी 'आंचल' ने रच दिया है इतिहास
ऐसे ही बढ़ती रहें बेटियां, यही तो हैं हम सबका गौरव और अभिमान भी।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) June 22, 2020
2013ம் ஆண்டு கேதர்நாத் வெள்ளத்தின் போது, பாதுகாப்பு படையினர் பொதுமக்களின் உயிரை காப்பாற்றினார்கள். இதனை கண்டு அதன் மூலம் இன்ஸ்பையரான அனச்சல் அன்று முதல் இந்திய விமானப்படையில் இணைய வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டார். மிகவும் நன்றாக படிக்கும் நபரான அனச்சல், கூடைப்பந்தாட்டத்திலும் கை தேர்ந்தவர். இன்று அவருடைய கனவு நிறைவேறிவிட்டது என்று மகிழ்ச்சி அடைகிறார் சுரேஷ்.
அனச்சல் தன்னுடைய கனவினை நிறைவேற்ற, எவ்வாறு உழைக்க வேண்டும், என்ன படித்து தேர்வில் வெற்றி அடைய வேண்டும் என்றெல்லாம் அருகில் இருக்கும் புத்தக நிலையத்தில் இருந்து தகவல்களை பெற்றுக் கொண்டார். மிகவும் தீவிரமாக அதற்காக படித்து தேர்வினை எழுதினார். அவருடைய 6வது முறை முயற்சியில் இவருக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது.
10 வரை படித்திருக்கும் சுரேஷ், “யாரும் என்னுடைய பொருளாதார நிலையை உணர்ந்து கொள்ள முடியும். அனச்சலின் பள்ளி மற்றும் கல்லூரிக்கான கட்டணத்தை கட்ட நான் பலமுறை கடன் வாங்கியுள்ளேன். சில நேரங்களில் நான் ஊரில் இல்லை என்று சொல்லி கட்டணத்தை தாமதமாக கட்டியுள்ளேன்” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil