/tamil-ie/media/media_files/uploads/2019/09/5.jpg)
teachers day, teachers day card, teachers day quotes, teachers day speech, happy teachers day, teacher day, teacher day speech, sarvepalli radhakrishnan, dr sarvepalli radhakrishnan, teachers day gift, radhakrishnan, happy teachers day card, ஆசிரியர் தினம், ஆசிரியர்கள், மாணவர்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன்
Teachers Day 2019 History, Importance: ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் எதிர்கால தூண்களான மாணவர்களின் வாழ்ககையை வடிவமைக்கும் ஆசிரியர்களை போற்றும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளே, ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1888ம் ஆண்டு பிறந்தார். படிப்பில் சிறந்துவிளங்கினார். நாட்டின் துணை ஜனாதிபதியாகவும், சுதந்திர இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார். இவரை கவுரவிக்கும் பொருட்டு, மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கியுள்ளது.
பாரம்பரிய தெலுங்கு குடும்பத்தில் ராதாகிருஷ்ணன் பிறந்தார். The Philosophy of Rabindranath Tagore என்ற புத்தகத்தை எழுதினார். தத்துவத்துறையில் முதுகலை படிப்பு படித்தார். இந்திய தத்துவத்துறையின் மீது சர்வதேச அளவிலான பார்வை ஏற்பட இவரது பங்களிப்பு முக்கிய காரணியாக அமைந்தது. சென்னை பிரசிடென்சி காலேஜ் மற்றும் கல்கத்தா பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். 1931 -36வரையிலான காலகட்டத்தில் ஆந்திரபிரதேச பல்கலைகழத்தின் துணைவேந்தராக பதவிவகித்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பேராசிரியராக 16 ஆண்டுகள் பணியாற்றினார்.
1962ம் ஆண்டு நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார். இவரின் ஆசிரியப்பணிகள், இவரின் பங்களிப்பு உள்ளிட்டவைகளை கவுரவிக்கும் வகையில், இவரது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
சமுதாயத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்கு குறித்து இந்த நாளில் குழந்தைகளுக்கு கற்றுத்தரப்படுகிறது. இந்த நாளில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் வாழ்க்கையை செதுக்கும் சிற்பிகளாக உள்ள ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையிலும், சமுதாயத்தில் அவர்களின் அளப்பரிய பங்கு உள்ளிட்டவைகளை மையக்கருத்தாக கொண்டு இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.