Advertisment

ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு காஷ்மீர் கோட்டையை கட்டிக்காக்கும் தமிழக கேடர் அதிகாரிகள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Team Kashmir lockdown k vijayakumar skandan krishnan - ஒரு மாதமாக காஷ்மீர் கோட்டையை கட்டிக்காக்கும் தமிழக கேடர் அதிகாரிகள்!

India LockDown till may 17, LockDown extends MHA Announced, pm modi, பொதுமுடக்கம் நீடிப்பு, இந்தியா பொதுமுடக்கம், லாக் டவுன்

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு, தேவையில்லாத வன்முறைகளை தவிர்க்க காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காஷ்மீரின் இந்த ஒரு மாத காலத்தில் அங்கு பாதுகாப்பு ரீதியிலும், நிர்வாக ரீதியிலும் அங்கம் வகிக்கும் தமிழக கேடர் அதிகாரிகள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இங்கே விவரிக்கிறது,

Advertisment

கே விஜயகுமார்

publive-image

1975ம் ஆண்டு தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான கே விஜயகுமார், 2018ம் ஆண்டு முன்னாள் காஷ்மீர் ஆளுநர் என்என் வோஹ்ராவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆகஸ்ட் 5ம் தேதி, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, தற்போதைய ஆளுநர் சத்ய பால் மாலிக்கின் ஆலோகசராக தனது பணியை தொடர்ந்து வருகிறார். உள்துறை அமைச்சகம் உள்பட வேறு சில துறைகளையும் அவர் கவனித்து வருகிறார். மிகவும் கடுமையான அதிகாரி என பெயர் சம்பாதித்திருக்கும் விஜயகுமார், வீரப்பனை பிடிக்க தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 'ஆபரேஷன் குக்கூன்' மூலம் 2004ம் ஆண்டு அந்த டாஸ்க்கை வெற்றிகரமாக நிறைவு செய்தார். மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இடது சாரி தீவிர பிரிவின் ஆலோசகராக செயல்பட்டார்.

தவிர, ஜம்மு & காஷ்மீரில் முக்கிய அங்கமாக திகழ்ந்தார். காஷ்மீரில் இது அவரது இரண்டாவது முறை பணியாகும். முன்னதாக, 1998 - 2000 காலக்கட்டத்தில், ஸ்ரீநகரில் எல்லை பாதுகாப்பு படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பதவி வகித்தார். விஜயகுமார் கடந்த காலத்தில் ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் தலைவராகவும், 2010லிருந்து இரண்டு ஆண்டுகள் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குநர் ஜெனரலாகவும் பணியாற்றினார். 2012ல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

ஸ்காந்தன் கிருஷ்ணன்

publive-image

கிருஷ்ணன், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் ஆலோசகராக, காஷ்மீரைப் பற்றி அதிகபட்ச புரிதலுடன் உள்ளவர்.  2007 முதல் 2012 வரை ஐந்து ஆண்டுகளாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மத்திய மாநில பிரிவு காஷ்மீரின் கூடுதல் செயலாளராக பொறுப்பு வகித்தார். அவர் அமைச்சரவையில் இருந்த நாட்களில், மாநிலத்தின் முக்கிய அரசியல் மற்றும் சமூக பிரமுகர்களுடன் - முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் பிரிவினைவாதிகள் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். 2012 ஆம் ஆண்டில், உள்துறை அமைச்சகத்தில் மத்திய-மாநில உறவுகளின் கூடுதல் செயலாளராக பதவி உயர்வு பெற்றார். 1982ம் ஆண்டு பேட்ச் தமிழக கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிருஷ்ணன் இதுபோன்ற பரந்த 'தொடர்பிற்காக' காஷ்மீர் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment