Bharat Biotech : செவ்வாய்க்கிழமை அன்று பாரத் பயோடெக் நிறுவனம், தங்களின் தடுப்பூசி உற்பத்தி தொழில்நுட்பத்தை நான்கு வெவ்வேறு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளது. ஆனால் இந்திய அரசின் Indian Immunologicals நிறுவனம் மட்டுமே மிக விரைவில் தடுப்பூசி தயாரிக்கும் பணியை துவங்கலாம் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
இந்நிறுவனத்திற்கு தடுப்பூசி உற்பத்தி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உற்பத்தி விரைவில் துவங்கப்படும். இந்திய அரசு மேலும் மூன்று நிறுவனங்களை எங்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். ஆனால் அந்த நிறுவனங்கள் அனைத்திலும் தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான வசதிகள் ஏதும் இல்லை என்று பாரத் பயோடெக்கில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
மாதம் ஒன்றுக்கு 25 மில்லியன் கோவாக்ஸின் தடுப்பூசிகளை பாரத் பயோடெக் உற்பத்தி செய்கிறது. தற்போது குஜராத்தின் அங்கலேஷ்வர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்நிறுவனத்தின் மற்றொரு தடுப்பூசி உற்பத்தி மையமும் விரைவில் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட உள்ளது.
இம்மாத துவக்கத்தில் பாரத் பயோடெக் வெளியிட்ட அறிக்கைகளில் மாதத்திற்கு 60 மில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
2.5 அதிகமான மரணங்கள்; சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இரண்டாம் அலை
அமெரிக்க சந்தையில் நுழைவதற்கு கோவாக்சினுக்கு உயிரியல் உரிம விண்ணப்பத்தை (biologics licence application (BLA) ) பெறுவதற்கான வழியை நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அந்த அதிகாரி கூறினார், அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான விண்ணப்பம் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் கட்ட சோதனைகளின் செயல்திறன் தரவுகளுடன் நாங்கள் மீண்டும் அமெரிக்காவில் அங்கீகாரம் பெற விண்ணப்பம் அனுப்புவோம். அங்கு ஒரு சிறிய மருத்துவ சோதனை தேவைப்படலாம். தற்போது குழந்தைகளுக்கும் கோவாக்ஸின் செலுத்துவதற்கான சோதனைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறினார். மேலும் தொழில்நுட்பத்தை மாற்றுவதற்கும் கோவாக்சின் தயாரிப்பதற்கும் அமெரிக்க நிறுவனங்களுடன் இந்த நிறுவனம் விவாதங்களைத் தொடங்கியுள்ளது.
நாங்கள் 50 நாடுகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளோம். சில நாடுங்கள், நாங்கள் அனுப்பிய தரவுகள் போதும் என்று கூறியுள்ளது. மற்ற நாடுகள், அவர்களின் கோரிக்கை கொஞ்சம் மாறுபடுகிறது என்று எங்களிடம் கூறியுள்ளனர். உலக சுகாதார அமைப்பின், அவசர கால பயன்பாட்டு அங்கீகாரத்தை பெறும் நடவடிக்கையும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil