முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மகனும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் - ஐஸ்வர்யா ராயின் நிச்சயதார்த்தம் பாட்னாவில் பிரமாண்டமாக நடைப்பெற்றது.
பிஹார் மாநிலத்தில் யாதவ் சமூகத்தில் இருந்து வந்த முதலாவது முதலமைச்சர் தராகோ ராயின் பேத்தியான ஐஸ்வர்யா ராயுக்கும் , பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மகனும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவுக்கும் கூடிய விரைவில் திருமணம் நடைப்பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்றைய தினம் பாட்னாவில் இவர்களின் இருவரின் நிச்சயார்த்த விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. வரும் மே 12 ஆம் தேதி பாட்னாவில் உள்ள ஒரு ஹோட்டலில் திருமணம் நடைபெறுகிறது. ஐஸ்வர்யாவுக்கு ஒரு சகோதரி, ஒரு சகோதரர் உள்ளனர். பாட்னாவில் உள்ள நோட்ரி டேம் அகாடெமியில் பள்ளிப்படிப்பை முடித்த ஐஸ்வர்யா ராய் டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தவர்.
தனது திருமணத்தில் மூன்று முக்கியமான கட்டுப்பாட்டுகளை விதித்திருந்த தேஜ் பிரதாப் யாதவ் , நிச்சயார்த்ததிலும் அதை அனைவரின் முன்பும் அறிவித்தார். அதன் பின்பு, இப்படி ஒரு நல்ல நேரத்தில் தன்னுடைய தந்தை சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/04/Donald-Trump-1-1-300x167.jpg)
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் இந்த திருமணம் குறித்து கூறுகையில்,”திருமணத்திற்காக லாலு பிரசாத் யாதவை ஜாமீனில் எடுக்க முயற்சிப்போம். ஜாமீன் கிடைக்காவிட்டால், பரோலில் வெளியே கொண்டு வருவவும் முயற்சி செய்வோம்.ஐஸ்வர்யா பற்றி எல்லோருக்கும் தெரியும் மிகவும் நல்ல பெண். அரசியல் குறித்தும் அவளுக்கு நன்கு தெரியும். அவளும் அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவள் தானே” என்று கூறியுள்ளார்.
திருமணம் அடுத்த மாத நடைபெறும் நேரத்தில் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருப்பது அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2018/04/Donald-Trump-1-2-300x167.jpg)