100 கோடி செலவில் நடந்த பிரம்மாண்ட திருமணம்.. 6 மாதத்தில் விவாகரத்து கேட்ட லாலு மகன்!

விஷயத்தை கேள்விப்பட்ட  லாலு பிரசாத் யாதவ், தன்னைப் பார்க்க உடனடியாக வருமாறு தேஜ் பிரதாபுக்கு அழைப்பு

விவாகரத்து கேட்ட லாலு மகன்
விவாகரத்து கேட்ட லாலு மகன்

திருமணம் ஆன 6 மாதத்தில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மகன், தேஜ் பிரதாப் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவாகரத்து கேட்ட லாலு மகன்:

முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மகனும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் – ஐஸ்வர்யா ராயின் திருமணம் கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. ஐஸ்வர்யா  பிஹார் மாநிலத்தில் யாதவ் சமூகத்தில் இருந்து வந்த முதலாவது முதலமைச்சர் தராகோ ராயின் பேத்தி ஆவர்.

iஇவர்களது திருமணம் பாட்னாவில் ஒரு நட்சத்திர ஹோட்டலில்  ஊரே வியக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது. மகனில்  திருமணத்தில் கலந்துக் கொள்ள ஊழல் வழக்கில் சிறையிலிருக்கும் லாலு பிரசாத 3 நாட்கள் பரோலில் வெளி வந்து திருமணத்தை சிறப்பாக நடத்திவிட்டு சென்றார்.

விவாகரத்து கேட்ட லாலு மகன்

தேஜ் பிரதாப் – ஐஸ்வர்யாவின் திருமணம் இப்படி தான் பிரம்மாண்டமாக நடைப்பெற வேண்டும் என்று ஜெயிலில் இருந்தப்படியே   லாலு தனது வழக்கறிஞர் மூலம் குடும்பத்தாரிடம் தெரிவித்திருந்த செய்திகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினர்.

திருமணத்திற்கு மட்டும் மொத்தம் 7000 ஆயிரம்  விஜபிக்கள் வருகை தந்திருந்தனர்.  50 வகையான சாப்பாடு, ஃபை ஸ்டார் ஹோட்டல் என்று  திருமணம்  பிரம்மாண்டத்தின் உச்சமாய் நடந்து முடிந்தது.

விவாகரத்து கேட்ட லாலு மகன்

அதன் பிறகு,  தனது மனைவியை  தேஜ் முதன்முறையாக சைக்கிளில்  வெளியே அழைத்துச் சென்ற  புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில், திருமணமாகி 6  தேஜ் யாதவ்  விவாகரத்து கேட்டு பாட்னா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த விவகாரம் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் புயலை கிளப்பியுள்ளது.தேஜ் பிரதாப் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்த விவரம் பெண் வீட்டாருக்கு தெரிந்ததும்,பதறிப்போன அவர்கள் உடனடியாக தேஜ் பிரதாப் மற்றும் அவரது தாயார் ராப்ரி தேவியைக் காண தேஜ் பிரதாபின் வீட்டுக்கு விரைந்தனர்.

இதற்கிடையே விஷயத்தை கேள்விப்பட்ட   லாலு பிரசாத் யாதவ், தன்னைப் பார்க்க உடனடியாக வருமாறு தேஜ் பிரதாபுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  ஊரே ஒன்றுக்கூடி  தேஜ் – ஐஸ்வர்யா திருமணத்தை நடத்தி வைத்தனர். ஆனால்  6 மாதத்தில்  தேஜ் விவாகரத்து கேட்டு  நீதிமன்றம் ஏறி இருப்பது கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tej pratap yadav files for divorce lawyer says not compatible

Next Story
சபரிமலை கோயில் நடை 5ம் தேதி திறப்பு… 144 தடை உத்தரவுSri Lankan woman tries to enter Sabarimala, சபரிமலை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com