tejas train booking : சர்வேதேச தரத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட தேஜஸ் ரயில் பெட்டிகள், சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப்-ல் கடந்த ஆண்டு நவம்பரில் தயாரிக்கப்பட்டன. வியாழனை தவிர்த்து வாரம் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த தேஜஸ் விரைவு ரயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு இடையே மட்டும் நின்று செல்லும்.
ஒரு எக்சிகியூட்டிவ் ஏசி சேர் கார் கோச், 12 ஏசி சேர் கார் கோச், 2 லக்கேஜ் கம் பர்த் கோச் என மொத்தம் இந்த ரயிலில் மொத்தம் 15 பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. முன்பதிவு இல்லாத பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்படவில்லை.
மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரயில் மூலம் சென்னையிலிருந்து மதுரைக்கு ஆறரை மணி நேரத்திற்குள் செல்லலாம். சென்னை – திருச்சி இடையே அமரும் வசதி கொண்ட ஏசி பெட்டிகளில் பயணிக்க 690 ரூபாயும், முதல் வகுப்பு சொகுசு பெட்டியில் பயணிக்க ஆயிரத்து 485 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்படி பல சிறப்பு அம்சங்களை பெற்றுள்ள தேஜஸ் ரயிலை ஐஆர்சிடிசியின் கட்டுப்பாட்டில் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று பயணிகள் கோரிக்கை வைத்திருந்தனர். கூடிய விரைவில் ஐஆர்சிடிசி தளத்தில் இனி தேஜஸ் ரயிலை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.
tejas train booking: இந்த சிறப்பு அறிவிப்புடன் பயணிகளுக்கு கிடைத்திருக்கும் மிகச் சிறந்த அறிவிப்பு இதுதான்.
ரயில் பயணத்தில் கால தாமதம் ஏற்பட்டால் அந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டால் 100 ரூபாய் இழப்பீடும், இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டால் 250 ரூபாய்இழப்பீடும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இயங்கவிருக்கும் பயணிகள் ரயிலான தேஜஸ் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு தாமத பயணங்களுக்கு இழப்பீடு வழங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த முதல் அறிவிப்பு லக்னோ-டெல்லி மார்க்கத்தில் இயங்கவிருக்கும் தேஜஸ் ரயிலில் முதன் முறையாக செயல்படுத்தப்படவுள்ளது.
இனி கடைசி நேரத்தில் அலைச்சல் வேண்டாம்! வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகளின் நிலவரத்தை முன்பே அறிய புதிய வசதி
இது மட்டுமல்லாமல், தேஜஸ் ரயில் பயணிகளுக்கென்று ப்ரத்யேக வசதி செய்யப்பட இருக்கிறது. பயணிகள் தங்கள் உடமைகளுடன் பயணிக்கத்தேவையில்லை என்றும், அவர்களது உடமைகளை பயணத்தின் ஆரம்பத்தில் பெற்றுக்கொண்டு, பயணத்தின் முடிவில் மீண்டும் பயணிகளிடமே ஒப்படைக்கும் நடைமுறையயும் அறிமுகப்படுத்த இருக்கிறது.