Advertisment

அண்ணாமலையுடன் பயணித்த தேஜஸ்வி சூர்யா விமான கதவை திறந்தது எப்படி? இண்டிகோ அறிக்கை

பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலையுடன் பயணம் செய்தவர் சூர்யாதான் என்றும் விமான நிறுவன வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tejasvi Surya ‘opened emergency exit’ of IndiGo aircraft before takeoff tamil news

BJP MP Tejasvi Surya was on IndiGo flight at Chennai airport.

News about Tejasvi Surya, emergency exit and BJP Tamil News: பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி தேசியத் தலைவரும், பெங்களூரு தெற்கு எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா, கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி சென்னை விமான நிலையத்தில், இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு முன்பு அவசரகால வெளியேறும் (எமர்ஜென்சி எக்ஸிட்) கதவைத் திறந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

சில ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, நேற்று செவ்வாயன்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. எக்ஸிட் கதவை திறந்தது சூர்யா தான் என்று செய்திகளில் கூறப்பட்டாலும், இண்டிகோ தனது அறிக்கையில் யாரையும் குறிப்பிடவில்லை.

“டிசம்பர் 10, 2022 அன்று சென்னையில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு 6E 7339 விமானத்தில் பயணித்த ஒரு பயணி, போர்டிங் செயல்பாட்டின் போது தற்செயலாக அவசரகால வழியைத் திறந்தார். இந்த செயலுக்கு பயணி உடனடியாக மன்னிப்பு கேட்டார். SOP களின் படி, சம்பவம் பதிவு செய்யப்பட்டது மற்றும் விமானம் கட்டாய பொறியியல் சோதனைகளுக்கு உட்பட்டது, இது விமானம் புறப்படுவதில் தாமதத்திற்கு வழிவகுத்தது, ”என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலையுடன் பயணம் செய்தவர் சூர்யாதான் என்று விமான நிறுவன வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

காலை 10.05 மணிக்கு விமானம் புறப்பட இருந்தது. சூர்யாவும் அண்ணாமலையும் அவசரகால கதவுக்கு அடுத்த இருக்கைகளில் இருந்தனர். கேபின் குழுவினர் பயணிகளுக்கு பாதுகாப்பு நெறிமுறை குறித்து விளக்கிக் கொண்டிருந்தபோது, ​​சூர்யா எக்ஸிட் கதவு வெளியீட்டு லீவரை இழுத்ததாக கூறப்படுகிறது.

இதனால், ஏற்கனவே டேக் ஆஃப் செய்யப்பட்டு இருந்த விமானம் எக்ஸிட் கதவு திறக்கப்பட்டபோது, உடனடியாக வானிலிருந்து தரையில் கீழே இறக்கப்பட்டுள்ளது. விமான நெறிமுறையின்படி, பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டனர், முழுமையான ஆய்வுக்குப் பின்னரே விமானம் புறப்பட்டுள்ளது. இறுதியாக மதியம் 12.27 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 1.23 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் தரையிறங்கியுள்ளது.

இதுகுறித்து சூர்யாவிடம் கருத்து கேட்க தொடர்பு கொண்டபோது, அவர் டெல்லியில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று விட்டதாக அவரது அலுவலகத்தினர் கூறினர்.

நமக்கு கிடைத்த தகவலின்படி, சூர்யா விமான நிறுவனத்திடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளார். "மன்னிப்புக் குறிப்பில் ஒரு செட் வடிவம் உள்ளது, அது சம்பவத்திற்குப் பிறகு அந்த நபரால் நிரப்பப்பட்டு கையொப்பமிடப்பட்டது" என்று ஒரு விமான நிலைய அதிகாரி கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) மற்றும் இது ஒரு "தவறு" என்றும் கூறியுள்ளது. "நிகழ்வு முறையாக அறிவிக்கப்பட்டது. விமானம் தரையில் இருக்கும் போது தவறுதலாக, RH (வலது கை) அவசரகால வழி ஒரு பயணியால் திறக்கப்பட்டது. குழுவினர் கவனத்தில் எடுத்துக்கொண்டனர், அதன் விளைவாக, விமானம் புறப்படுவதற்கு முன், கதவை மீண்டும் நிறுவுதல், அழுத்தத்தை சரிபார்த்தல் போன்ற அனைத்து பொருத்தமான காற்றோட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. எந்த பாதுகாப்பும் சமரசம் செய்யப்படவில்லை, ”என்று கட்டுப்பாட்டாளர் கூறினார்.

ஆனால், இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனம் தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று சென்னையில் உள்ள இந்திய விமான நிலையங்கள் ஆணைய அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. "சம்பவம் நடந்தபோது எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை, இது தொடர்பாக எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை" என்று அந்த அதிகாரி கூறினார்.

விமானத்தில் இருந்த திமுக தலைவர் பி டி அரசகுமார் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், விமானம் தாமதமானதை உறுதிப்படுத்தினார், ஆனால், அது தொடர்பான விவரம் தனக்குத் தெரியாது என்று கூறினார். "புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், விமானப் பணிப்பெண், தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாகவும், பயணிகள் அனைவரும் வெளியேற வேண்டும் என்றும் எங்களுக்குத் தெரிவித்தார். பொறியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் விமானத்தை ஆய்வு செய்யத் தொடங்கியதால், நாங்கள் அனைவரும் மீண்டும் முனையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம், ”என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கடந்த டிசம்பர் 29 அன்று, தமிழக மின்சார துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்திருந்தார். ஆனால், தனது பதிவில் சூர்யா அல்லது அண்ணாமலையின் பெயரை குறிப்பிடமால் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Trichy Indigo Airlines Indigo Bangalore India Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment