Telangana Chief Minister K Chandrashekar Rao meets Pinarayi Vijayan : தெலுங்கானா முதல்வர் மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் இன்று மாலை திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க உள்ளார்.
மேலும் வருகின்ற 13ம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேச உள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது முதலமைச்சர் அலுவலகம்.
முக்கியத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை
ஏற்கனவே கர்நாடக முதல்வரும் ஜனதா தளம் கட்சியின் தலைவருமான எச்.டி. குமாரசாமி தெலுங்கானா முதல்வரிடம் பேசிய்யுள்ளார். இன்று நடைபெற இருக்கும் கேரள மற்றும் தெலுங்கானா முதல்வர்களின் சந்திப்பில் இடதுசாரி முன்னணி ஆட்சியைப் பற்றியும், மாற்று அரசியல் களம் குறித்தும் பேச இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள முதல்வரை சந்தித்து பேசிவிட்டு பிறகு ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட புனித தலங்களில் பிரார்த்தனை செய்துவிட்டு வீடு திரும்புகிறார் கே.சி.ஆர். தற்போது மத்தியில் நடைபெற்று வரும் ஆட்சி குறித்தும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல்கள் குறித்தும் பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.
நிஜாம்பாத் நாடாளுமன்ற உறுப்பினரும், சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், இந்த தேர்தலில் நிச்சயம் 120 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுவிடலாம். மேலும் பிராந்திய கட்சிகள் காங்கிரஸூடன் கூட்டணி வைப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இல்லாத பல்வேறு கட்சிகளிடம் தங்களின் பேச்சு வார்த்தையை தெலுங்கானா நடத்தி வருகிறது. இதனால் ஒரு கூட்டணி உருவாகுமானால் பிராந்திய கட்சிகள் மூலமாக நல்ல முடிவுகள் எட்டப்படலாம் என்று அவர் கூறினார். (நன்றி - பி.டி.ஐ)
மேலும் படிக்க : காங்கிரஸ் தலைவர்களை என்றும் கைவிடாத தென்னகம்