தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இது அக்கட்சியில் சீனியர் லீடர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ஏ.பி. விஷ்ணுவர்த்ன் ரெட்டிக்கு அந்தத் தொகுதியில் போட்டியிட விரும்பினார்.
இந்த நிலையில் அதிருப்தி காரணமாக அவர், முதலமைச்சர் கே சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்துவிட்டார்.
அசாரூதீன் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்ற போதிலும் அவர் தெலங்கானாவில் இதுவரை போட்டியிட்டது கிடையாது. உத்தரப் பிரதேசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.
முன்னதாக ஹைதராபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஷ்ணுவர்தனின் சகோதரி விஜயா ரெட்டி போட்டியிட்டார்.
அதேபோல் மற்றொரு காங்கிரஸ் மூத்தத் தலைவரான நாகம் ஜனார்த்தனன் ரெட்டியும் அதிருப்தியில் இருந்தார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Telangana Congress sees more exits to BRS, ticket to Azharuddin latest trigger
விஷ்ணுவர்தன் மற்றும் நாகம் ஜனார்த்தன் ஆகியோரை வரவேற்க சந்திரசேகர ராவ் ஆர்வத்துடன் உள்ளார். 119 சட்டமன்றத் தொகுதிகளில் 116 இடங்களுக்கு வேட்பாளர்களை ஏற்கனவே கட்சி அறிவித்திருந்த போதிலும் BRS-க்கு கட்சி தாவுவது நடக்கிறது.
முன்னதாக, காங்கிரஸ் தனது முதல் பட்டியலை அறிவித்த பிறகு, முன்னாள் எம்எல்ஏ இ சேகர் மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் பொன்னால லட்சுமியா உள்ளிட்ட தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதற்கிடையில், மேலும் பல காங்கிரஸ் தலைவர்கள் பிஆர்எஸ் கட்சியில் சேரலாம் என்றும் கூறப்படுகிறது. பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸுக்கு திரும்பிய சில மணி நேரத்தில் முனுகோட்டில் கோமதிரெட்டி ராஜ் கோபால் ரெட்டியை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியது. இதனால் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் கோபத்தில் போஸ்டர்களை கிழித்து ஆட்சேபம் தெரிவித்தனர்.
இந்தநிலையில், அக்டோபர் 15 அன்று 55 வேட்பாளர்களின் முதல் பட்டியலையும், அக்டோபர் 27 அன்று 45 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலையும் காங்கிரஸ் அறிவித்தது. மீதமுள்ள 19 இடங்களுக்கு இடதுசாரிக் கட்சிகளும் தங்களுக்குப் பங்களிக்கக் கூடும் என்ற சலசலப்பு நிலவுகிறது.
இதற்கிடையில், தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ஏ ரேவந்த் ரெட்டி கூறுகையில், வேட்பாளர்கள் வெற்றிபெறும் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர், சில ஆர்வலர்கள் குற்றம் சாட்டுவது போல் வேறு எந்தக் கருத்தில் அல்ல” என்றார்.
இந்த நிலையில், பல மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக பிஆர்எஸ் செவ்வாய்க்கிழமை (அக்.30) இணைந்த நாகம் ஜனார்த்தன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“