Advertisment

எல்லை நிர்ணயம் பிரச்சனை- 100 மக்களவை இடங்களை இழக்கும் தென்னிந்தியா, காங்கிரசை மன்னிக்குமா? மோடி

நாடு இப்போது அடுத்த எல்லை நிர்ணயம் பற்றி பேசுகிறது. மக்கள் தொகை எங்கு குறைவாக இருக்கிறதோ, அங்கெல்லாம் மக்களவைத் தொகுதிகள் குறைந்து, மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடத்தில் உயரும்...

author-image
WebDesk
New Update
Modi premium

South stands to lose 100 seats’: Modi rolls the delimitation dice, with aim at Cong’s ‘aabadi-haq’ argument

செவ்வாயன்று தெலுங்கானாவில் தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 2026 ஆம் ஆண்டு வரவிருக்கும் எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சனையில் முதன்முறையாக தென்னிந்திய மாநிலங்களை தேர்வு செய்தார்.

Advertisment

தெற்கில் உள்ள பல தலைவர்கள் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்ட எல்லை நிர்ணயம் என்பது பாராளுமன்றத்தில் தங்களின் பிரதிநிதித்துவம் குறைவதற்கு வழிவகுக்கும் என்று கவலை தெரிவித்த நிலையில், "தெற்கு 100 இடங்களை இழக்கும்" என்பதை அவதானித்த மோடி, காங்கிரஸின் நிலைப்பாடு குறித்தும் அதே கருத்தை முன்வைத்தார்.

நிஜாமாபாத்தில் பேசிய மோடி, சாதிவாரி கணக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்திய கர்நாடக சட்டசபை தேர்தலில் முதலில் குறிப்பிட்ட ஜித்னி ஆபாடி, உத்னா ஹக்” (Jitni aabadi, utna haq) என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார்.

நாடு இப்போது அடுத்த எல்லை நிர்ணயம் பற்றி பேசுகிறது. மக்கள் தொகை எங்கு குறைவாக இருக்கிறதோ, அங்கெல்லாம் மக்களவைத் தொகுதிகள் குறைந்து, மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இடத்தில் உயரும்...

மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் தென் மாநிலங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன, ஆனால் மக்கள்தொகை விகிதாச்சாரத்தில் உரிமைகள் பற்றிய காங்கிரஸின் புதிய யோசனை செயல்படுத்தப்பட்டால் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.

தென்னிந்தியா 100 லோக்சபா இடங்களை இழக்கும்... தென்னிந்தியா இதை ஏற்குமா? தென்னிந்தியா காங்கிரசை மன்னிக்குமா? தேசத்தை முட்டாளாக்க வேண்டாம் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் கூற விரும்புகிறேன். ஏன் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள், என்று மோடி வாதிட்டார்.

இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் "தென்னிந்தியாவிற்கு எதிரானதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்ட பிரதமர், "இந்த புதிய சிந்தனை (ஜித்னி ஆபாடி, உத்னா ஹக்) தென்னிந்தியாவிற்கு அநீதி என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்" என்றார்.

இது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத நடவடிக்கை என்றாலும், பாஜக வட்டாரங்கள், இது பிரதமரால் நன்கு திட்டமிடப்பட்டதாகக் கூறுகின்றன. வடக்கு என்பது கட்சியின் வழக்கமான கோட்டையாக உள்ளது, மேலும் எல்லை நிர்ணயம் என்பது அங்கு பாஜகவுக்கு லாபம் என்று கருதுவது பாதுகாப்பானது.

அதோடு, இது எல்லாக் கட்சிகளாலும் சில சமயங்களில் விழுங்க வேண்டிய கசப்பான மாத்திரையாகும் - மேலும் காங்கிரஸுக்கு மோடி ஒரு சவாலை விட்டிருக்கலாம். மேலும், ராகுல் வாசகத்தையும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்ததையும் பயன்படுத்தி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கூச்சல், முதன்மையாக OBC மீதான பாஜகவின் பிடியைக் குறைப்பதற்காக இருந்தாலும், தென்னிந்தியாவில் எப்படியும் குறைந்த இழுவையைக் கொண்டிருக்கலாம், அங்கு பெரும்பாலான மாநிலங்களில் இடைநிலை சாதிகள் அதிகாரத்தின் நெம்புகோலைக் கட்டுப்படுத்துகின்றன.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2026 எல்லை நிர்ணயம், நாடாளுமன்றத்தில் தங்கள் எண்ணிக்கை குறையும் வாய்ப்பை எதிர்கொள்வதால், தென் மாநிலங்களின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் வாள்என்று குறிப்பிட்டார்.

மற்ற முதல்வர்களும் இதேபோன்ற கவலைகளை எழுப்பினர், தெற்கின் மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதற்காகவும், மையத்தால் நிர்ணயிக்கப்பட்ட மக்கள்தொகை கட்டுப்பாட்டு இலக்குகளை நிறைவேற்றுவதற்கும் "தண்டிக்கப்பட்டதா" என்று கேட்டனர்.

நிதி ஆயோக் உதாரணம்

15வது நிதிக் கமிஷன், 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்தி, மத்திய அரசு வரியாக திரட்டிய பணத்தை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்தது. மக்கள்தொகை அடிப்படையிலான அளவுகோல், 14வது நிதிக் குழுவின் மொத்த வரிப்பகிர்வில் 17.98% ஆக இருந்த அவர்களின் பங்கு 15ல்- 15.8% ஆக குறைந்துள்ளது என்று தென் மாநிலங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நாட்டின் 20% மக்கள்தொகையில், தென் மாநிலங்கள் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 35% பங்களிக்கின்றன, இது அவர்களின் கோபத்தின் மற்றொரு ஆதாரமாகும்.

சில மதிப்பீடுகளின்படி, ஏற்கனவே அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 80% (அல்லது 144 இடங்கள், இப்போது உள்ள 80 இடங்களுடன் ஒப்பிடும்போது) அதிகரிக்கலாம், அதே சமயம் கேரளா (20 இடங்கள்) எந்த மாற்றத்தையும் காணாது, மேலும் தமிழ்நாடு 10% (,இப்போது 39 முதல் 43) அதிகரிக்கலாம்.

மொத்தத்தில் வடக்கில் மக்களவைத் தொகுதிகள் அதிகரித்திருப்பதால், மத்திய அரசு முடிவு செய்யும் விஷயங்களில் தெற்குப் பகுதிக்கு இது குறைவாகவே இருக்கும்.

2001ஆம் ஆண்டு, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2026ஆம் ஆண்டு வரை எல்லை நிர்ணயத்தை முடக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, அப்போதைய சட்ட அமைச்சர் அருண் ஜெட்லி, சில மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை திறம்பட செயல்படுத்த தவறியதே இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள காரணம் என்று கூறியிருந்தார்.

தேசிய மக்கள்தொகைக் கொள்கையானது 2026 ஆம் ஆண்டை நாட்டின் மக்கள்தொகை நிலைப்படுத்தும் ஆண்டாகக் கருதுகிறது.

எனவே 2000 ஆம் ஆண்டு வரை உண்மையாக இருந்ததை 2026 ஆம் ஆண்டு வரை உறைய வைக்க முயல்கிறது. அதாவது, நாட்டில் மக்கள்தொகை எண்ணிக்கை நம்பிக்கையுடன் ஸ்திரப்படும் என்று நாம் எதிர்பார்க்கும் ஆண்டு, என்று அவர் கூறினார்.

2026 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மக்கள்தொகை இலக்கை அடைய முடியுமா என்பது குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் அப்போது சந்தேகம் தெரிவித்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவராஜ் பாட்டீல், இந்த நம்பிக்கையை ஏற்றுக்கொள்வது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது.

1976 இல், மக்கள் தொகை அதிகரிக்காமல் இருக்கலாம் என்று நினைத்தார்கள்... ஆனால் மக்கள் தொகை அதிகரித்துள்ளது... மக்கள் தொகை இன்று இருக்கும் இடத்திலேயே இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இந்த தர்க்கத்தை ஏற்றுக்கொள்வது எனக்கு மிகவும் கடினம், என்று கூறினார்.

திமுக எம்.பி. கனிமொழி என்விஎன் சோமு, கடந்த ஆண்டு ராஜ்யசபாவில் மத்திய நிதிப் பகிர்வு குறித்து பேசிய போது, “குடும்பக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய மாநிலங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதும், பொறுப்பற்ற மாநிலங்கள் ஊக்கப்படுத்தப்படுவதும் முற்றிலும் அபத்தமானது மற்றும் நியாயமற்றதுஎன்றார்.

சமீபத்திய சிறப்பு அமர்வில், ‘75 ஆண்டுகால நாடாளுமன்றப் பயணம்பற்றி விவாதிக்கும் போது, ​​கேரளாவைச் சேர்ந்த சிபிஐ(எம்) மக்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ், கேரளா தேசிய கிட்டிக்கு 1 ரூபாய் அளித்து 25 பைசா திரும்பப் பெறுகிறது” என்று கூறினார்.

மத்திய அமைச்சரும், கர்நாடகாவின் பாஜக ராஜ்யசபா எம்பியுமான ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், மோடியின் தெலுங்கானா பேச்சு- இந்திய கூட்டணிக்குள் உள்ள ஆழமான முரண்பாடுகள் மற்றும் பாசாங்குத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

ஒருபுறம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘ஜித்னி ஆபாதி, உத்னா ஹக்என்று வெளிப்படையாகக் கூறுகிறார், அதாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக இடங்கள். மறுபுறம், தென் மாநிலங்கள் தொகுதிகளை இழக்கும் என்று அவரது பங்காளியான திமுக கவலைப்படுகிறது.

ராகுலின் அரசியலை நாடு பின்பற்றினால் தென் மாநிலங்கள் நூறு இடங்களை இழக்க நேரிடும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர், கூறினார்..

Read in English: ‘South stands to lose 100 seats’: Modi rolls the delimitation dice, with aim at Cong’s ‘aabadi-haq’ argument

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment