சுனில் கனுகோலுவுடன் இணைந்து பணிபுரிந்தவர்கள் தெலங்கானாவில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டதாகவும் விருப்பமானவர்களுக்கு சாதகமாக செயல்பட எந்த அழுத்தமும் இல்லை என்றும் ராஜஸ்தன், ம.பி தலைவர்கள் அவர்கள் வழியில் செயல்பட்டனர் என்றும் தெரிவிக்கின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்க: After Karnataka, strategist Sunil Kanugolu pulls off another big win for Congress
2014-ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவான பிறகு, ஆளும் கட்சியாக இருந்து வந்த பாரத ராஷ்டிர சமிதியை (பி.ஆர்.எஸ்) வீழ்த்தி காங்கிரஸ் கட்சி முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது.
சமீபத்தில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெற்ற அமோக வெற்றியுடன் இந்த வெற்றி ஒரு பொதுவான காரணியைக் கொண்டுள்ளது - அந்த காரணி தேர்தல் வியூகவாதி சுனில் கனுகோலு. அசோக் கெலாட் மற்றும் கமல்நாத் போன்ற தலைவர்கள் அவரது உள் ஆய்வுகளில் ஈடுபட மாட்டார்கள் என்று நம்பப்படும் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தைப் போலல்லாமல், தேர்தல் வியூகவாதிக்கு தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸால் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
“தெலுங்கானாவில் எங்களுக்கு சுதந்திரமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. நாங்கள் எங்கள் உள் ஆய்வுகளில் பணியாற்றி அதற்கேற்ப செயல்பட்டோம். இந்த வெற்றிக்கு கட்சித் தலைவர்கள் பங்களிக்கவில்லை என்று எந்த வகையிலும் கூற முடியாது. அவர்கள் எப்பொழுதும் பொறுமையாக எங்களின் ஆலோசனைகளைக் கேட்டு, எங்களின் அறிவுரைகளுக்குச் செவிசாய்த்தார்கள்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத சுனில் கனுகோலு நிறுவனத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறினார்.
சுனில் கனுகோலுவின் குழு, ராஜஸ்தான் தேர்தலுக்கு முன்னதாக, ஒரு மதிப்பீட்டை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் காங்கிரஸ் தலைமை வெற்றிபெறும் வாய்ப்பு குறைவாகவோ அல்லது வெற்றியடையவோ வாய்ப்பு இல்லாத வேட்பாளர்களுக்கு டிக்கெட் தர மறுக்கும் ஆர்வத்துடன் இருந்தது. இருப்பினும், தேர்தல் வியூகவாதிகளை விட தனக்கு மாநிலத்தை நன்கு தெரியும் என்று அசோக் கெலாட் கூறியதாக கூறப்படுகிறது. உண்மையில், கெலாட்டின் பிரச்சாரம் பெரும்பாலும் மற்றொரு அரசியல் ஆலோசனை நிறுவனமான டிசைன் பாக்ஸ்ட் (DesignBoxed) மூலம் நிர்வகிக்கப்பட்டது.
கனுகோலுவின் நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் கூறுகையில், அவர்கள் நடத்திய உள் ஆய்வுகளின் பக்கச்சார்பற்ற தன்மையே தெலங்கானா வெற்றிக்கு முக்கியக் காரணம் என்றார். மேலும், “தலைவர்களிடம் இருந்து அல்லது கட்சியில் இருந்து எந்த குறுக்கீடும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பக்கச்சார்பான அறிக்கைகளை வெளியிட அழுத்தம் கொடுக்கவில்லை. கள யதார்த்தம் கடுமையான போராட்டத்தை பரிந்துரைத்தால், அதை கட்சிக்கு தெளிவாக சொல்லும் சுதந்திரம் எங்களுக்கு இருந்தது. இது ஆக்கப்பூர்வமான விவாதங்களைக் கொண்டுவர உதவியது” என்று அவர் கூறினார்.
முன்னதாக, பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் (I-PAC) உடன் தொடங்கிய சுனில் கனுகோலு, கர்நாடகாவில் காங்கிரஸ் பிரச்சாரத்தை வழிநடத்த உதவினார், அதற்காக அவருக்கு சித்தராமையா அரசாங்கத்தில் கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“