2018-ல் 19 இடங்களிலிருந்து தற்போது 60 இடங்களுக்கு மேல் முன்னணியில் உள்ளது, தெலங்கானாவில் காங்கிரஸின் திருப்பம் மிகப்பெரியது. தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி (TPCC) தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி, 56, அவர் கட்சியின் முகமாக உருவெடுத்து, ஆளும் பாரத ராஷ்டிர சமிதியை (BRS) ஆக்ரோஷமாக எதிர் கொண்டார்.
அக்டோபரில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும் இந்த பாய்ச்சலை கணிப்பது கடினமாக இருந்தது. அப்போது, பல்வேறு கோஷ்டிகளுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடுகளுடன், காங்கிரஸை ஒன்றாக இணைத்து வைத்திருப்பதில் ரேவந்த் சிரமப்பட்டார். உள்ளூர் தலைவர்கள் அவர் மீது "எதேச்சதிகாரம்" மற்றும் "தனது சொந்த ஆதரவாளர்களை ஊக்குவிப்பதாக" அவர் மீது புகார்களை எழுப்பியதாக கூறப்படுகிறது.
ஆனால் ரேவந்த், ஒரு நாளைக்கு குறைந்தது 4 பேரணிகளில் களத்தில் இறங்கி உரையாற்றி, மாநில அளவிலான தலைவராக தன்னை மாற்றினார். அவர் உயர்மட்ட தலைமையுடன், குறிப்பாக ராகுல் காந்தியுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், தேர்தலுக்குப் பிறகு மீண்டும் சில பிரச்னைகள் தலைதூக்கலாம். கட்சிக்குள் கோஷ்டி பூசல் இன்னும் தலைவிரித்தாடுகிறது; டிபிசிசி முன்னாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டியும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.
சனிக்கிழமையன்று, டி.பி.சி.சி தலைவர்கள் பி.ஆர்.எஸ்-க்கு எதிராக புகார் அளிக்க தலைமை தேர்தல் அதிகாரி விகாஸ் ராஜ் அலுவலகத்திற்குச் சென்ற போது, உத்தம் குமார்தான் அந்தக் குழுவை வழிநடத்தினார். முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், மத்திய தலைமையும் சேர்ந்து முடிவு செய்யும் என்று உத்தம் குமார் கூறியதால் ரேவந்த் பின்னணியில் இருந்தார்.
ரேவந்த் அரசியல் பயணம்
ரேவந்த் ஏ.பி.வி.பி-ல் தொடங்கினார். பின்ன்ர் தெலுங்கு தேசம் கட்சிக்கு மாறி 2009 மற்றும் 2014 தேர்தல்களில் கோடங்கல் தொகுதியில் வெற்றி பெற்றார்.
லஞ்ச ஊழலில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகினார். அவர் அக்டோபர் 2017-ல் காங்கிரஸில் சேர்ந்தார் மற்றும் 2018 தேர்தலில் பி.ஆர்.எஸ்ஸிடம் கோடாங்கல் தோல்வியடைந்தார். இருப்பினும், சில மாதங்களில் மீண்டு வந்த அவர், 2019 மக்களவைத் தேர்தலில் மல்காஜ்கிரி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
ரேவந்த், கே.சி.ஆர் மற்றும் அவரது குடும்பத்தினர்- மகனும் அமைச்சருமான கே. தாரகராம ராவை எதிர்கொள்ளக் கூடியவர் என்று அறியப்பட்டது. கே.சி.ஆர் குடும்பத்தினர் அவரது மகள் கே.கவிதா மருமகன் டி ஹரிஷ் ராவ் ஆகியவர்களை பொது கூட்ட உரைகள், நேர்காணல்களில் நேரடியாக விமர்சனம் செய்தார்.
2020 ஆம் ஆண்டில், அவர் ஒரு மாநில அமைச்சருக்கு சொந்தமானது மற்றும் விதிகளை மீறி கட்டப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு கட்டிடத்தின் படங்களை எடுக்க ட்ரோனை "சட்டவிரோதமாக" பயன்படுத்தியது தொடர்பாக ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் ஜூன் 2021-ல் தெலங்கான காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து, ரேவந்த் ஒரு வலுவான எதிர்க்கட்சித் தலைவராக தனது இமேஜை பலப்படுத்திக் கொண்டார்.
அவரது சுயவிவரத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், காங்கிரஸ் இந்த முறை ரேவந்தைத் தேர்ந்தெடுத்தது. தொடர்ந்து இம்முறை அவரின் கோடங்கல் தொகுதிக்கு மாறாக பி.ஆர்.எஸ் தலைவரும், முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ்வுக்கு எதிராக காமரெட்டிதொகுதியில் காங்கிரஸ் போட்டியிடச் செய்தது.
எவ்வாறாயினும், கட்சிக்குள் அவரது வளர்ந்து வரும் அந்தஸ்து, உத்தம் குமார் ரெட்டி, டி. ஜெயபிரகாஷ் ரெட்டி, வி. ஹனுமந்த ராவ், மது யக்ஷி கவுட், எம். சசிதர் ரெட்டி மற்றும் ஜே. கீதா ரெட்டி போன்ற மூத்த கட்சித் தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/telangana-elections-is-revanth-reddy-among-key-architects-of-congress-telangana-show-9052416/
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.