Advertisment

வேதனை, சோதனை, இன்னல்கள்: 'பிளான் பி' தேடலில் தெலுங்கானா அரசு வேலை நாடுநர்கள்

தெலுங்கானாவில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுகள் இரண்டு முறை (அக்டோபர் 2022 மற்றும் இந்த ஜூன் மாதத்தில்) நடத்தப்பட்டன. ஆனால் இரண்டு முறையும் ரத்து செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
Telangana exam hub trials and tribulations of job aspirants and a search for Plan B Tamil News

கடந்த மே மாதம், டி.பி.எஸ்.சி-யில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், அதன் வாரியத்தை மாற்றக் கோரியும் ஒரு குழு ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.

Telangana: அரங்குகளில், மேடையில், மரத்தடியில் இடம் கிடைக்கும் இடமெல்லாம் படிக்கும் மடிப்பு நாற்காலிகளின் வரிசைகள், புத்தகமும் கையுமாக பல வேலை நாடுநர்கள், 5 ரூபாய்க்கு உணவு பரிமாறும் ஸ்டால், மவுனப் போர்வையில் மணிக் கணக்காக நேரம் செலவிடல். இவை தான் ஐதராபாத்தில் உள்ள சிக்கட்பல்லியில் உள்ள நகர மைய நூலகத்தில் நூற்றுக்கணக்கான வேலைநாடுநர்கள் யு.பி.எஸ்.சி, தெலுங்கானா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (டி.பி.எஸ்.சி) மற்றும் பிற நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகும் காட்சி. 

Advertisment

2022- 23 ஆம் ஆண்டு காலகட்ட தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, தேசிய சராசரியான 10% உடன் ஒப்பிடும்போது, ​​இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 15.1% அதிகமாக இருக்கும் தெலுங்கானாவில், இந்த வேலை நாடுநர்கள் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு வாக்களிக்க தயாராகின்றனர். தெலுங்கானாவில் வருகிற நவம்பர் 30 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்) மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஒரே நேரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், வேலையில்லா திண்டாத்தை குறித்து வைத்தும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: In Telangana’s exam hub, trials and tribulations of job aspirants, and a search for Plan B

கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வெளியிடப்பட்ட காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தேர்தல் அறிக்கைகளில் வேலைநாடுநர்கள் முக்கிய இடம்பிடித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஓராண்டுக்குள் 2 லட்சம் காலியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு பணிக்கு என சிறப்புத் துறையை அமைக்க போவதாகவும், யு.பி.எஸ்.சி தேர்வுகளைப் போல் மாநில ஆட்சேர்ப்புத் தேர்வுகளை “வெளிப்படையான மற்றும் காலக்கெடுவுடன் நடத்துவோம்” என்றும் பா.ஜ.க கூறியுள்ளது. "நீலு, நிதிலு, நியமகாலு (தண்ணீர், நிதி மற்றும் வேலைகள்)" என்ற தெலுங்கானா மாநில இயக்கத்தின் தெளிவான அழைப்பிற்கு இணங்க கே.சி.ஆரின் பாரத ராஷ்டிர சமித் கட்சி (பி. ஆர்.எஸ்) தோல்வியடைந்ததாக இரு கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. அக்கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக ஆளும் கட்சி கூறியது குறித்தும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஐதராபாத் மத்திய நூலகத்தின் உள்ளே, அரசு வேலைகள் தேவைப்படும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த கனவுகளை நனவாக்க முயற்சிக்கிறார்கள். 25 வயது மாணவர் சொல்வது போல் "குறைந்த மன உறுதியின் உணர்வு" இருப்பதாக தெரிகிறது. “நூலகத்திற்கு  ஒரு நாளைக்கு 2,000 பேர் வந்தார்கள். தற்போது, ​​அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது,'' என்று அந்த மாணவர் கூறினார். 

அக்டோபரில் அறிவிக்கப்பட்ட ஆட்சேர்ப்புப் பட்டியலில் கான்ஸ்டபிள் பதவியைப் பெற்ற 28 வயதான சுரேஷ், சிறந்த பதவியைப் பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளார். குரூப் 1 தேர்வுகளை நடத்துவதில் நடந்த முறைகேடுகள் மற்றும் குரூப் 2 தேர்வில் ஏற்பட்ட தாமதம் ஆகியவற்றுடன் அவரைப் போன்ற ஆர்வலர்களின் குறைந்த மன உறுதியும் தொடர்புடையது என்றும் கூறுகிறார்.

குரூப்-1 முதல்நிலைத் தேர்வுகள் இரண்டு முறை (அக்டோபர் 2022 மற்றும் இந்த ஜூன் மாதத்தில்) நடத்தப்பட்டன. ஆனால் இரண்டு முறையும் ரத்து செய்யப்பட்டது. முதல் முறையாக வினாத்தாள் கசிந்ததால் ரத்து செய்யப்பட்டது. இந்த விஷயத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) படி, டி.பி.எஸ்.சி ஊழியர்கள் கசிவுக்குப் பின்னால் இருந்தனர் மற்றும் 2022 முதல் கமிஷன் நடத்திய பல்வேறு தேர்வுகளின் 15 வினாத்தாள்களை அணுகியுள்ளனர். 

இரண்டாவது முறையாக, தெலுங்கானா உயர் நீதிமன்றம் தேர்வுகளை நடத்த உத்தரவிட்டது. தேர்வு நடத்துவதில் விதிமீறல்கள் நடந்ததாகக் கூறி, காங்கிரஸின் மாணவர் பிரிவின் ஆதரவுடன், 4 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பிறகு மீண்டும் நடத்தப்பட்டது. நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த குரூப் 2 தேர்வுகள் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபரில் 23 வயதான எம் பிரவலிகா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது ஐதராபாத்தில் போராட்டங்கள் நடைபெற முக்கிய காரணமாக அமைந்தது. போராட்டக்காரர்கள் குரூப்-2 தேர்வுகள் தாமதம் காரணமாக நடந்ததாகக் கூறினர். ஆனால், தனிப்பட்ட காரணங்களால் இது நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

‘வேறுபாடு இல்லை’

மாணவர் சுரேஷ் கூறுகையில், பலர் ஐதராபாத் நகரில் வாடகையைக் கொடுக்க முடியாமல் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிவிட்டனர் (அந்தப் பகுதியில் ஒரு பகிரப்பட்ட அறைக்கு மாதம் ரூ. 6,000 செலவாகும்). வேறு வேலை எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. பலரும் பயிற்சி பெறுவதற்காக கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் வந்துள்ளனர். 

பயிற்சிக்காக ரூ.55,000 செலுத்திய 24 வயதான மாணவர் மணிதீப், ஜக்தியால் நகரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அக்டோபரில் நடந்த குரூப்-1 தேர்வுக்கு தகுதி பெற்ற 25,000 பேரில் (2.8 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர்) இவரும் ஒருவர். “நான் இரண்டு முறை தேர்வு எழுதினேன். என் அப்பா ஒரு பைக் மெக்கானிக், என் அம்மா வீட்டு வேலை செய்பவர். நான் பின்வாங்கிவிட்டேன், இந்த தாமதங்கள் தொடர்ந்தால், நான் ஒரு பிளான் பி-யைத் தேட வேண்டும்." என்று கூறினார். 

ஜக்தியாலைச் சேர்ந்த 29 வயதான கொலகானி ராகேஷ் மிகவும் நேரடியான பதிலை தெரிவித்தார். “தெலுங்கானா மாநிலம் உருவாகாமல் இருந்திருக்க விரும்புகிறேன். முன்பை விட வித்தியாசம் இல்லை. நான் 2018 ஆம் ஆண்டு முதல் தயாராகி வருகிறேன். நான் பி.எட் (கல்வியில் இளங்கலை) படித்துள்ளேன். ஆனால் எனது மாவட்டத்தில் எனது பாடத்திற்கான பதவிகள் இல்லை. தகவல் தொழில்நுட்பத் துறை, சிறு வணிகங்கள் அல்லது தனியார் ஆசிரியர் வேலைகளை மேற்கொள்வது மட்டுமே மீதமுள்ள விருப்பங்கள். ஆனால் அவர்கள் சரியாக சம்பளம் தருவதில்லை. எனக்கு வீட்டிலிருந்து அழுத்தம் அதிகம். எந்த தெளிவும் இல்லை ஆனால் அரசு வேலை பெறுவதே குறிக்கோள்” என்று கூறினார்.

கடந்த மே மாதம், டி.பி.எஸ்.சி-யில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், அதன் வாரியத்தை மாற்றக் கோரியும் ஒரு குழு ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதி இருந்தனர். 

நூலகத்தில் உள்ள பல ​​வேலைநாடுநர்களும் பிளான் பி பற்றி பேசுகிறார்கள். சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான ரமேஷ் யெடுரகண்ட்லா, தனது சொந்த ஊரில் பால் பண்ணை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகிறார். பிஸ்வால் கமிட்டியை மேற்கோள் காட்டி, 2021ல் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சி.ஆர் பிஸ்வால் தலைமையிலான குழு 1.9 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறியது. கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் கே.சி.ஆர் அறிவித்த 90,000 க்கும் மேற்பட்ட வேலைகள் பற்றி அவர் கேள்வி எழுப்பிகிறார். 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக் குழுவில் இடம்பெற்றிருந்த தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் மகேஷ் கவுட், “பி.ஆர்.எஸ் அரசாங்கத்தில் அரசு ஆட்சேர்ப்புகள் 50,000 -ஐக் கூட தாண்டவில்லை. பல்வேறு வகையான தேர்வுகள் 17 முறை ஒத்திவைக்கப்பட்டன. முப்பத்தைந்து லட்சம் வேலையில்லாத இளைஞர்கள் வேலைக்காக ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கான திறன் மேம்பாட்டு முயற்சிகளை நாங்கள் திட்டமிடுவோம்." என்று கூறினார். 

முதல்வரின் மகனும், மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான கே டி ராமாராவ், நவம்பர் 13 அன்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “1.6 லட்சம் வேலை காலியிடங்கள் ஒன்பது ஆண்டுகளில் நிரப்பப்பட்டதாக 100% நம்பிக்கை இருப்பதாகவும், இந்த புள்ளிவிவரங்களின் முறிவுகளைப் பகிர்ந்து கொண்டதாகவும் எழுதினார். ஒத்திவைக்கப்பட்ட அல்லது ரத்துசெய்யப்பட்ட அனைத்து தேர்வுகளும் விரைவில் நடத்தப்படுவதை உறுதி செய்வதே எங்கள் முதன்மையான முன்னுரிமை," என்றும் அந்தப் பதிவில் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Telangana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment