இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல அரசு அலுவலகங்களிலும் வைரஸ் பரவி வருகிறது.
இந்நிலையில், தெலங்கானா ஆளுநர் மாளிகையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில், தெலங்கானா ஆளுநர் மாளிகையில் 10 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று இல்லை என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
12, 2020
ராஜ் பவனின் செய்திக்குறிப்பில், கோவிட் -19 க்கான விரைவான ஆன்டிஜென் சோதனைகள் செய்யப்பட்டன, ஏனெனில் சிறப்பு போலீஸ் பட்டாலியன் பணியாளர்கள் சிலருக்கு ஆர்டி பி.சி.ஆர் சோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதில், மொத்தமாக 395 சோதனைகள் நடத்தப்பட்டன, அவற்றில் 347 பேருக்கு கொரோனா தொற்று இல்லை. ஆனால் 28 காவல்துறையிருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். பத்து ராஜ் பவன் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்த 20 பேரும் மேல் சிகிச்சைக்காக அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கூட கொரோனா தொற்று கண்டறியப்பட்டு ஆளுநர் மாளிகை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil