33 முயற்சிகள் - 51 வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சி : "கொரோனாவுக்கே நன்றி"
Telangana ssc results : ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்த போதும், தொடர்ந்து தேர்வு எழுதி வந்தேன். ஆங்கில தேர்வை நீக்கிவிடுமாறு கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டேன்
Telangana ssc results : ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்த போதும், தொடர்ந்து தேர்வு எழுதி வந்தேன். ஆங்கில தேர்வை நீக்கிவிடுமாறு கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டேன்
கொரோனா தொற்று காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்ததால், 34வது முயற்சியில், கொரோனா உபயத்தால் தேர்ச்சி அடைந்துள்ளார் 51 வயது நூருதீன்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த முகம்மது நூருதீன், முதன்முதலில் 1987ம் ஆண்டில், 10ம் வகுப்பு எழுத துவங்கினார். அவருக்கு ஆங்கிலம் சரியாக வராததால் அந்த தேர்வில் அவர் தோல்வியடைந்தார். குடும்ப சூழல் காரணமாக அவருக்கு டியூசன் செல்ல இயலாத நிலையில் இருந்தார். நூருதீனுக்கு பலர் உதவி செய்த நிலையிலும், அவரால், ஆங்கில பாடத்தில் தேர்ச்சி அடைவதற்கான மதிப்பெண் பெற இயலவில்லை. ஒவ்வொரு முறையும் அவர் 30க்கு குறைவாகவே மதிப்பெண்களை பெற்றார். உருது, கணிதம் உள்ளிட்ட பாடங்களில் 40க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற தன்னால், ஆங்கில பாடத்தில் 30 மதிப்பெண்களை தாண்ட முடியவில்லை என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
வயது ஐம்பதை கடந்த நிலையிலும், 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற முகம்மது நூருதீனின் தாகம் மற்றும் அடங்கவில்லை. ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்த போதும், தொடர்ந்து தேர்வு எழுதி வந்தேன். ஆங்கில தேர்வை நீக்கிவிடுமாறு கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டேன். அது கல்விக்கொள்கைக்கு எதிரானது என்று அவர்கள் கூறினர். 34வது தடவையாக இந்த ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தேன். கொரோனா தொற்று காரணமாக அரசு அளித்த உத்தரவின்பேரில், நான் தற்போது தேர்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறினார்.
எனக்கு சிறுவயதில் இருந்தே போலீஸ் அல்லது பாதுகாப்பு படையில் சேர வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்கு 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த தேர்வில் தேர்ச்சி அடையாததால், எனது கனவு, கனவாகவே போய்விட்டதாக தெரிவிக்கும் முகம்மது நூருதீன். முஷீராபாத் பகுதியில் உள்ள அஞ்சுமன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செக்யூரிட்டியாக 1990ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகின்றார்.
தற்போது 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்துள்ள நிலையில், அரசு துறையில் உள்ள கீழ்நிலைப்பணிகளுக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளார். ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு வருவதால், அந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். அரசு வேலை என்றால் அதிக சம்பளமும், கூடுதல் சலுகைகளும் கிடைக்கும்.
51 வயதிலும் கல்வியின் மீது உள்ள தீராத காதலால், 2015ம் ஆண்டு முதல், முகம்மது நூருதீன், அப்பகுதியில் 2 மதரசா பள்ளிகளை நடத்தி வருகிறார். நான் பட்ட கஷ்டத்தை மற்ற குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கிறேன். எங்களது பள்ளியில் 80 குழந்தைகள் படிக்கின்றனர். அவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. குழந்தைகளுக்கு டியூசன் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்று நூருதீன் தெரிவித்துள்ளார்.
நூருதீன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற செய்தியை, அவரின் 90 வயதான அப்பா கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். நூருதீனுக்கு 2 மகன்களும்.1 மகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் பள்ளி படிப்பும், மகள் பி.காம் பட்டப்படிப்பும் படித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil