தெலங்கானா மாநகராட்சி தேர்தல் 2020: ஆளும் டிஆர்எஸ் ஆளுமையான வெற்றி!

Telangana Municipal Election Results 2020: தெலங்கானா மாநிலத்தில் 120 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல்கள் முடிவுகள் இன்று (ஜன.25) அறிவிக்கப்பட்டு வருகிறது. 120 நகராட்சிகளுக்கும் 9 மாநகராட்சிகளுக்கும் நடைபெற்ற தேர்தல்களுக்கான முடிவில், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) தலைமையகமான தெலங்கானா பவனில் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன. இதுவரை, ஆளும்…

By: January 25, 2020, 3:02:06 PM

Telangana Municipal Election Results 2020: தெலங்கானா மாநிலத்தில் 120 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தல்கள் முடிவுகள் இன்று (ஜன.25) அறிவிக்கப்பட்டு வருகிறது. 120 நகராட்சிகளுக்கும் 9 மாநகராட்சிகளுக்கும் நடைபெற்ற தேர்தல்களுக்கான முடிவில், தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) தலைமையகமான தெலங்கானா பவனில் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன.

இதுவரை, ஆளும் டி.ஆர்.எஸ் 120 நகராட்சிகளில் 84 ஐ வென்றுள்ளது. 30 நகராட்சிகளில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல், ஒன்பது மாநகராட்சிகளில் 5ல் வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, மீதமுள்ள நான்கில் முன்னிலையில் உள்ளது. காங்கிரசும் பாஜகவும் கடுமையான சவால் அளித்தன. ஆனால், இறுதியில் டிஆர்எஸ் வேட்பாளர்கள் மாநிலம் முழுவதும் வெற்றி பெற்றனர்.

இந்தியாவிலும் வுஹான் வைரஸ்? சென்னை உட்பட 7 விமான நிலையங்களில் தெர்மல் சோதனை!

120 நகராட்சிகள் மற்றும் ஒன்பது மாநகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த ஜனவரி 22 அன்று நடைபெற்றது, இதில் 70.26 சதவீத வாக்குகள் பதிவானது. கரீம்நகர் மாநகராட்சியின் 58 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு ஜனவரி 24ம் தேதி நடைபெற்றது, இதில் 62.18 சதவீத வாக்குகள் பதிவானது.

இதுவரை 3535 வார்டுகளில் 529 க்கான முடிவுகளை தெலுங்கானா மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிஆர்எஸ் 337 வார்டுகளை வென்றுள்ளது, காங்கிரஸ் -94, பாஜக -35, ஏஐஎம்ஐஎம்- 20, சுயேச்சைகள் -34, மற்றவை -5, சிபிஐ -2, டிடிபி -1, சிபிஎம் -1 என்று வெற்றிப் பெற்றுள்ளன.

டிஆர்எஸ் தொண்டர்கள் கொண்டாட்டம்:

மாநிலம் முழுவதிலுமான வெற்றியால் டிஆர்எஸ் தொண்டர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Telangana Municipal Election Results 2020 Telangana Municipal Election Results 2020

முதல்வர் கேசிஆர் மகள் கவிதா ட்வீட்

வெற்றி குறித்து நன்றி தெரிவித்து தெலங்கானா முதல்வர் கேசிஆர் மகளும் முன்னாள் எம்.பி.யுமான கவிதா கல்வகுன்ட்லா ட்வீட் செய்துள்ளார்.

அதில், “நகராட்சி தேர்தல்களில் பிரம்மாண்டமான வெற்றியை கொடுத்த தெலங்கானா மக்களுக்கு மிகப்பெரிய நன்றி. வெற்றிப் பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கு வாழ்த்துகள், வெற்றிக்கு கடுமையாக உழைத்த அனைத்து டிஆர்எஸ் ஆதரவாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். ஜெய் தெலங்கானா!!”

என்று பதிவிட்டுள்ளார்.

71வது குடியரசு தினம் : டெல்லியில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் என்னென்ன?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Telangana municipal election results 2020 trs clean sweep

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X