Advertisment

ரஷ்ய அரசாங்க வேலை... ஏமாற்றப்பட்ட தெலங்கானா இளைஞர்; ரஷ்யா - உக்ரைன் போரில் சேர்ந்து மரணம்

முகமது அஃப்சான் ஒரு துணிக்கடையில் விற்பனையாளராக வேலை செய்தபோது அவருக்கு மாஸ்கோவில் இந்த வேலை வாய்ப்பு கிடைத்தது.

author-image
WebDesk
New Update
Telangana youth duped

ரஷ்யாவில் மரணமடைந்த இந்தியர் அஃப்சானின் புகைப்படத்துடன் அவருடைய சகோதரர் முகமது இம்ரான் (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ரஷ்ய அரசாங்க வேலை என ஏமாற்றப்பட்ட தெலங்கானாவைச் சேர்ந்த 30 வயது நபர், உக்ரைனுடனான ரஷ்யாவின் போரில் சேர்ந்து மோதல் பகுதியில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Telangana youth ‘duped into joining Russia-Ukraine war’ dies on frontlines

இந்த வார தொடக்கத்தில், ஐதராபாத்தில் வசிக்கும் முகமது அஃப்சானின் (30) குடும்பத்தினர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், அவர் ரஷ்ய அரசாங்க அலுவலகங்களில் உதவியாளராக வேலைக்கு விண்ணப்பிப்பதாக நம்பி ஏமாந்து, போர் முனைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு அவர்களின் உயிருக்கு ஆபத்தானது என்று கூறினார்கள்.

“அவர்கள் ஏமாற்றப்பட்டனர். அவர்களை வேலைக்கு சேர்த்த முகவர், அவர்கள் மாஸ்கோவில் மட்டுமே வேலை செய்வார்கள் என்று கூறினார்; அதற்கு பதிலாக, அவர்களுக்கு 15 நாள் பயிற்சி அளிக்கப்பட்டு உக்ரைனில் கைவிடப்பட்டனர். அங்கு அவர்கள் போரில் போராடும் ரஷ்ய துருப்புக்களுடன் தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்” என்று அஃப்சானின் சகோதரர் முகமது இம்ரான் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். இவரது சகோதரர் நவம்பரில் மாஸ்கோவுக்கு சென்றார்.

அஃப்சான் மாஸ்கோவில் வேலை வாய்ப்பு கிடைத்தபோது, அவர் ஒரு துணிக்கடையில் விற்பனையாளராக வேலை செய்தார். மற்ற இளைஞர்களைப் போலவே அவருக்கும் முதல் மூன்று மாதங்களுக்கு மாதம் ரூ. 45,000 சம்பளம் வழங்கப்படும், அது படிப்படியாக ரூ. 1.5 லட்சமாக அதிகரிக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஒரு வருடம் பணிபுரிந்த பிறகு, அவர் ரஷ்ய பாஸ்போர்ட் மற்றும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இது பணம் சம்பாதிப்பதற்கான ஒரு சலுகை மற்றும் ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அதில் விழுந்தனர். நவம்பர் 9-ம் தேதி அஃப்சான் மாஸ்கோவிற்கு புறப்பட்டார்” என்று இம்ரான் கூறினார்.

ரஷ்யா-உக்ரைன் எல்லையில் இருந்து அஃப்சானின் கடைசி வீடியோ அழைப்பு டிசம்பர் 31-ம் தேதி வந்தது. “அதற்கு பிறகு, அவருடன் எந்த தொடர்பும் இல்லை; அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதை சமீபத்தில் கண்டுபிடித்தோம். மத்திய அரசு தலையிட்டு அவர்களை மீட்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று இம்ரான் கூறினார்.

ரஷ்யா - உக்ரைன் போரில் சிக்கிய தெலங்கானாவைச் சேர்ந்த இருவரில் அஃப்சானும் ஒருவர். மற்றொருவர், முகமது சுபியான் (23),  இவர் டிசம்பரில் மாஸ்கோவுக்கு சென்றார்.

சுஃபியான் துபாயில் உள்ள பேக்கிங் நிறுவனத்தில் மாதம் ரூ.30,000 சம்பாதித்து வந்தார். அவர் யூடியூப் சேனலை நடத்தும் பைசல் கான் என்ற முகவருடன் தொடர்பு கொண்டார்,  அவர் மாஸ்கோவில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க மூளைச்சலவை செய்யப்பட்டார். அவர் ஒருபோதும் சம்பாதிக்கவில்லை” என்று சுபியானின் சகோதரர் சையத் சல்மான் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

“ரஷ்ய அரசாங்க அலுவலகத்தில் உதவியாளர் வேலை என்று அவருக்குச் சொல்லப்பட்டது. அவருக்கு மாதம் ரூ. 1 லட்சத்துக்கு மேல் வழங்கப்படும் என்றும், ஓராண்டுக்குப் பிறகு குடியுரிமை வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. ஏஜெண்டிடம் கமிஷனாக ரூ.1.5 லட்சம் கொடுத்துவிட்டு இந்தியா வந்தார். முகவர் விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்தார், சுஃபியான் டிசம்பர் 17-ம் தேதி புறப்பட்டார்” என்று சல்மான் கூறினார்.

குஜராத்தைச் சேர்ந்த 23 வயதான ஹெமில் மங்குகியா பிப்ரவரி 21-ம் தேதி ரஷ்யா - உக்ரைன் போர் மோதல் பகுதியில் இறந்தார். மற்ற இளைஞர்களைப் போலவே,  ‘பாபா வ்லாக்ஸ்’ என்ற சேனலில் யூடியூப் வீடியோ மூலம் போர் மண்டலத்திற்கான அவரது பயணம் தொடங்கியது. அவரது குடும்பத்திர் கூறுகையில், “அவர் டிசம்பர் 24-ம் தேதி முதல் பணியில் அமர்த்தப்பட்டார். ஒரு நாளில் இரண்டு மணி நேரம் சேற்றைத் தோண்டி பதுங்கு குழிகளை உருவாக்குவதும், பின்னர் போர்முனையில் உள்ள ரஷ்ய வீரர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குவதும் அவர்களது வேலையாக இருந்தது. இயந்திர துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒரு முகாமில் ஹெமிலுக்கு ஒரு மாத பயிற்சி அளிக்கப்பட்டது” என்று அவருடைய உறவினர் ஒருவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Telagnana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment