/indian-express-tamil/media/media_files/2024/10/21/GM2I3P30w97JRkY74m37.jpg)
தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் துணை ராணுவப் படையினரின் (சி.ஆர்.பி.எஃப்) பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சி.ஆர்.பி.எஃப் பள்ளி அமைந்துள்ள இடத்திற்கு அருகே பலத்த சத்தத்துடன் குண்டு வெடிப்பு நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Rohini blast: Telegram channel claims involvement of pro-Khalistan groups, Delhi Police say probing all angles
இந்நிலையில், டெலிகிராமில் செயல்பட்டு வரும் குழு ஒன்றில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் காட்சிகள் பரப்பப்பட்டு, காலிஸ்தான் அமைப்புக்கும், குண்டு வெடிப்பு நிகழ்வுக்கும் தொடர்புள்ளது போன்று பதிவிடப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அது சம்பந்தப்பட்ட டெலிகிராம் குழுவை நிர்வகித்து வருபவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்போது அது குறித்து தெரிவிக்க முடியாது எனவும் காவல்துறை துணை ஆணையர் அமித் கோயல் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தற்போது நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.