சமீபத்தில் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஆந்திராவில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஜெகன் மோகன் ரெட்டியும், பிரதமர் மோடிக்கு நெருக்கமாகவே இருக்கிறார்.
சட்டமன்றத்தில் 23 தொகுதிகளையும், மக்களவையில் வெறும் 3 தொகுதிகளை மட்டுமே தெலுங்கு தேசம் கட்சி பெற்றது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடு, தற்போது குடும்பத்துடன் வெளிநாடு சென்று ஓய்வு எடுத்து வருகிறார். இந்தச் சூழலில் மொத்தமுள்ள 6 தெலுங்கு தேசம் கட்சி ராஜ்ய சபா எம்.பி.க்களில் 4 எம்.பி.க்கள் பாஜகவில் இன்று ஐக்கியமாகியுள்ளனர். ஒய்எஸ் சௌத்ரி, சிஎம் ரமேஷ், டிஜி வெங்கடேஷ் ஆகிய மூன்று தெலுங்கு தேச கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்களும் பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் டெல்லியில் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர்.
June 2019
மற்றொரு ராஜ்ய சபா எம்பி ஜி.எம்.ராவ் உடல் நலக்குறைவால் வரவில்லை. அவர் பின்னர் பாஜகவில் முறைப்படி இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.