Ayodhya not a cakewalk for saffron party : ராமர் கோவில் ஏற்கனவே கட்டப்பட்டு வருகின்ற நிலையில் , வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஆளும் பாஜகவின் முக்கிய விவகாரமாக கோவில் பிரச்சனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது. உ.பி.யின் ஐந்தாவது கட்டத் தேர்தலில் பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள அயோத்தியின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலிலும் பாஜக களம் இறங்குகிறது.
ஆனாலும், சமூக அமைப்பு மற்றும் சமன்பாடுகள் தற்போது பாஜக வேட்பாளராக, ஆளும் கட்சி எம்.எல்.ஏவையே பாஜக நிறுத்தியுள்ளது அக்கட்சிக்கு ஆதரவாக இல்லை. பாஜகவின் ஐந்துமுறை எம்.எல்.ஏவை தோற்கடித்த முன்னாள் அமைச்சர் தேஜ் நாராயணனை சமாஜ்வாடி கட்சி குப்தாவிற்கு எதிராக களத்தில் இறக்கியுள்ளது.
1991ம் ஆண்டு முதல் 5 முறை அந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்ற லல்லு சிங் முதன்முறையாக 2012ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டார்.
அயோத்தியில் 3.79 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தலித் வாக்காளர்களின் எண்ணிக்கை 65 ஆயிரமாக உள்ளது. பிராமண வாக்காளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக உள்ளது. இஸ்லாமியர்கள் மற்றும் யாதவ வாக்காளர்களின் எண்ணிக்கை கூட்டாக ஒரு லட்சத்தை தொடுகிறாது. மேலும் காயாஸ்த், வைஷ்யா, அகர்வால், குர்மி, நிஷாத், மௌரியா, ராஜ்பார் மற்றும் இதர பிரிவினரும் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
தற்போதைய சமூக நிலைகள் மதிப்புமிக்க அயோத்தி தொகுதியில் எங்கள் கட்சிக்கு தேர்தலை சவாலான பணியாக மாற்றியுள்ளது. யாதவர்களும் இஸ்லாமியர்களும் வெகுகாலமாக சமாஜ்வாடி கட்சிக்கு தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் சமாஜ்வாடி கட்சி உள்ளூர் பிராமணர் ஒருவரை வேட்பாளர்காக களம் இறக்கியுள்ளது. இதனால் பிராமணர்கள் மற்றும் இதர பிரிவினர்களின் வாக்குகளும் பிரியும் வாய்ப்புகள் உள்ளது. தலித் வாக்காளர்கள் இங்கே மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆனால், மக்கள் ராமர் மற்றும் அயோத்தியுடன் தொடர்புடையவர்கள், எனவே வாக்குப்பதிவு நாளில் இது 2017 தேர்தலில் நடந்தது போல் இந்து-முஸ்லீம் பிரச்சினையாக மாறும் என்று பாஜக தலைவர் ஒருவர் கூறினார்.
ஏழைகளுக்கு இலவச ரேஷன், கிசான் சம்மன் நிதி மற்றும் யோகி ஆதித்யநாத் அரசால் செய்யப்பட்ட மின்சாரம், சாலை விரிவாக்கம் மற்றும் நதிகளின் படித்துறைகளை அழகுபடுத்துதல் போன்ற வளர்ச்சிப் பணிகள் போன்று பல்வேறு அம்சங்கள் குறித்தும், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போது வாக்காளர்கள் மத்தியில் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.
கடந்த தேர்தல் வரை ராமர் கோவில் விவகாரம் ஒரு நீடித்த, நிலுவையில் இருக்கும் வாக்குறுதியாக இருந்தது. ஆனால் தற்போது கோவில் கட்டபப்ட்டு வருகிறது. இது மக்கள் மனதில் பாஜக மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இது எங்களுக்கும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்றும் பாஜக தலைவர் கூறினார்.
ஆனால் 2012ம் ஆண்டு தேர்தலை கணக்கில் கொள்ள வேண்டும். எனவே கட்சி அதிக நம்பிக்கையில் இருக்க கூடாது. அந்தந்த சமூகங்களை கவர பல்வேறு சாதி குழுக்களின் தலைவர்களை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
அவாத் தொகுதியில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் சோபா கரந்த்லஜே சில நாட்களுக்கு முன்பு அயோத்திக்கு வருகை புரிந்தார். ராமர் கோவில் மற்றும் இதர மேம்பாட்டு திட்டங்கள் எப்படி செயல்பட்டு வருகின்றன என்பதை மேற்பார்வையிட தொடர்ந்து யோகி ஆதித்யநாத் அப்பகுதிக்கு வருகை புரிந்தார். 2017இல், குப்தா அந்த தொகுதியின் 49.56 சதவீத வாக்குகளைப் பெற்று 50,440 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராமஜென்ம பூமி விவகாரம் உச்சத்தில் இருந்த காலமான 1991ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து பாஜகவின் வாக்கு வங்கிகள் சரிந்து வந்தன. ஆனால் கடந்த தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கியானது 51.30% ஆக எகிறியது.
நான் மக்களிடம் சென்று கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதியின் வளர்ச்சிக்காக கட்சி மேற்கொண்ட பணிகள் என்ன என்பதை மேற்கோள் காட்டி வருகின்றேன் என்று பாஜக வேட்பாளர் குப்தா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
ராமர் கோவில் விவகாரமானது நம்பிக்கை தொடர்பானது என்று சுட்டிக்காட்டிய அவர், நவம்பர் 9, 2019 தீர்ப்பிற்கு பிறகு கட்டுமான பணிகள் துவங்கியது. நரேந்திர மோடி பூமி பூஜை நடத்தினார். அதற்கு முன்பு அயோத்தியில் பல்வேறு சுற்றுலாத்துறை தொடர்பான திட்டங்களை யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தியுள்ளார் என்று அவர் கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சி ஓ.பி.சி. பிரிவை சார்ந்த ரவி பிரகாஷ் மௌரியாவை களம் இறக்கியுள்ளது. இருப்பினும் இந்த தேர்தலானது பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சியினருக்கும் இடையானதாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.
சமாஜ்வாடி வேட்பாளர் தேஜ் நாராயணன் பாண்டே இது குறித்து கூறிய போது, யோத்தியில் சாலைகள் மற்றும் விமான நிலைய மேம்பாடு என்ற பெயரில் ராமரின் ‘பிரஜா’ சொத்துக்களில் புல்டோசர்களை இயக்க ஆதித்யநாத் அரசு விரும்புகிறது. அதை நாங்கள் எதிர்க்கிறோம். எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் நாங்கள் அயோத்தி நகராட்சியில் வீட்டு வரி மற்றும் குடிந்ரி வசதியை தள்ளுபடி செய்வோம். அனைவருக்கும் இலவச மின்சாரத்தை உறுதி செய்வோம் என்று கூறினார்.
ராமர் கோவில் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய போது, இந்த விவகாரம் தற்போது பாஜகவிற்கு சாதகமாக அமையாது என்று கூறினார் அவர். நான் என்ன ராமர் கோவிலுக்கு எதிராகவா இருக்கின்றேன். நானும் ஹனுமன் கர்ஹி அன்று அனுமனுக்கான சலிசா கூறுகிறேன். இங்கு யாரும் ராமர் கோவிலுக்கு எதிராக இல்லை. ஆனால் பாஜக கோவில், கப்ரிஸ்தான் மற்றும் ஷம்ஷான் பற்றி மட்டுமே பேசுகிறது. வேலை வாய்ப்பு, கல்வி, மற்றும் சுகாதாரம் ஆகியவையே எங்களின் பிரச்சனை. பாஜக அரசு இந்த பிரச்சனைகளை சரி செய்ய முயற்சிக்கவில்லை. அதில் தோல்வி அடைந்துவிட்டது என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.