உலக புகழ்பெற்ற புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகர் கோவில் கோவிலுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் அருகில் உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்து அறநிலை துறை, வில்லியனூர் பஞ்சாயத்து ஆணையர், வில்லியனூர் எஸ்.பி அலுவலகம், வில்லியனூர் காவல் நிலையம் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்து எங்கள் நிலத்தை கையகப்படுத்தி கொடுக்க வேண்டும் என புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று காலை ஒன்பது மணி அளவில் மணக்குள விநாயகர் கோயில் அறங்காவலர் குழுவினர், கோயிலுக்கு சொந்தமாக இடத்திற்கு சென்றனர், இந்து அறநிலைத்துறை ஊழியர்கள், கொம்பின் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் வில்லியனூர் காவல் நிலைய போலீசார் அந்த இடத்திற்கு சென்று அந்த இடத்தை கையகப்படுத்தி கோவில் ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.
அந்த இடத்தை சிலர் கையகப்படுத்தி வேலிகளை அமைத்திருந்தனர் , அதை போலீசார் அப்புறப்படுத்தினர். கோவில் நிர்வாகம் இந்த சொத்தை பாதுகாத்துக் கொடுக்க வேண்டும் என இந்து அறநிலைத்துறை வில்லியனூர் கொம்பியும் பஞ்சாயத்து, வில்லியனூர் எஸ்.பி. அலுவலகம் வில்லியனூர் காவல் நிலையம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சுமார் நாலு கோடி மதிப்புள்ள சொத்தை மீட்டு கொடுத்தனர்.
அங்கு யாரோ சிலர் சாலை வசதியை ஏற்படுத்தி அதை காலி மனையாக விற்பனை செய்வதற்கு வைத்திருந்தனர் . அந்த சாலையையும் ஜேசிபி மூலம் அதிகாரிகள் துணையுடன் கோவில் நிர்வாகம் அப்புறப்படுத்தியது. அந்த இடத்தை சுற்றி புதிய நகர் உருவாகி உள்ளது. அந்தப் புதிய நகருக்கு செல்வதற்கு இந்தக் கோவில் நிலத்தை பயன்படுத்தி வந்தனர். அதையும் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பால் கோவில் நிர்வாகம் வேலி அமைக்கும் பணியை இன்று துவங்கியது.
செய்தி: பாபு ராஜேந்திரன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”