Advertisment

கத்தோலிக்க மீனவர்கள் போராட்டம்.. விழிஞ்சம் கட்டுமானம் நிறுத்தம்.. திருவனந்தபுரத்தில் பதற்றம்

விழிஞ்சம் துறைமுகத்துக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், ஆதரவாக நாயர், இந்து நாடார், ஈழவ அமைப்புகள் களத்தில் குதித்துள்ளன.

author-image
WebDesk
New Update
Tension at Adani groups Vizhinjam project after protesting fishermen stop boulder-laden trucks

கத்தோலிக்க கிறிஸ்தவ மீனவர்களின் போராட்டத்தால் விழிஞ்சம் துறைமுகம் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

அதானி குழுமத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள விழிஞ்சம் இன்டர்நேஷனல் சீபோர்ட் லிமிடெட் கட்டுமானப் பகுதியில், சனிக்கிழமை (நவ.26) மீனவர்கள் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திட்டத்தை உடனடியாக முடிக்க விரும்பும் பல்வேறு இந்து அமைப்புகளின் ஆர்வலர்கள் நேருக்கு நேர் சந்தித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

Advertisment

ரூ.7,500 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு எதிராக மீனவர்கள் போராட்டத்தைத் தொடங்கியதைத் தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களாக திட்டத்தின் கட்டுமானம் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு அதானி குழுமம் சனிக்கிழமை முதல் பணிகளை மீண்டும் தொடங்க முடிவு செய்தது.

அதன்படி, அதானி போர்ட்ஸ் மற்றும் எஸ்இஇசட் பிரைவேட் லிமிடெட் வாயில் அருகே சுமார் இரண்டு டஜன் லாரிகள் பாறாங்கற்களை ஏற்றிச் சென்றன.

அப்போது, கத்தோலிக்க திருச்சபையின் தலைமையில் மீனவர்கள் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது பதற்றத்தை ஏற்படுத்தியது.

அப்போது, இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக இருந்த உள்ளூர் மக்கள் நடவடிக்கைக் குழுவின் பதாகையின் கீழ் ஏராளமானோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பலத்த போலீஸ் படை பதற்றத்தை தணிக்க முயன்றபோதும் இரு தரப்பினரும் பரஸ்பரம் காரசாரமான வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.

தொடர்ந்து, இருவரும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சில லாரிகள் மீதும் மீனவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர், திட்ட இடத்தில் இருந்து லாரிகள் வலுக்கட்டாயமாக வெளியேறிய பிறகுதான் பதற்றம் தணிந்தது.

முன்னதாக, அதானி குழுமம் உயர் நீதிமன்றத்திடம் இருந்து சாதகமான உத்தரவை பெற்றது. இதையடுத்து, வேலையை மீண்டும் தொடங்க போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு மாநில அரசிடம் கேட்டுக்கொண்டது.

மேலும், கட்டுமானப் பணிகளைத் தடுக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், மீனவர்கள் ஏழு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, கட்டுமானப் பணிகளை நிறுத்தவும், கடலோரப் பகுதியில் கட்டுமானத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவியல் ஆய்வு நடத்தவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கட்டுமானத்தால் திருவனந்தபுரம் கடற்கரையோரத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டு குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.

எனினும், பிரேக்வாட்டர் அமைப்பதற்கான பாறாங்கற்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்கனவே 2019-ஆம் ஆண்டிற்கான காலக்கெடுவை தவறவிட்ட திட்டத்தின் கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்தது.

கிறிஸ்தவ மீனவர்கள் இத்திட்டத்திற்கு எதிராக உள்ள நிலையில், உள்ளூர் மக்கள் நடவடிக்கைக் குழு மெதுவாக அதானி துறைமுகத்திற்கு ஆதரவாக வலுவான இந்துக் குரலாக உருவெடுத்துள்ளது.

இப்பணியை முடிக்க கோரி, கடந்த இரண்டு மாதங்களாக, இந்த நடவடிக்கை குழுவும் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக் குழுவிற்கு நாயர் சர்வீஸ் சொசைட்டி, ஓபிசி இந்து அமைப்பான ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் மற்றும் தெற்கு கேரளாவில் உள்ள இந்து நாடார் சமூகத்தினரிடையே கணிசமான பங்கைக் கொண்ட வைகுண்ட சுவாமி தர்ம பிரச்சாரம் போன்ற பல்வேறு இந்து அமைப்புகளின் ஆதரவு உள்ளது.

கடந்த மாதம், CPI(M) மற்றும் BJP தலைவர்கள் தங்கள் அரசியல் வேறுபாடுகளை புதைத்துவிட்டு, திட்டத்திற்கு ஆதரவாக உள்ளூர் நடவடிக்கைக் குழுவின் மேடையைப் பகிர்ந்து கொண்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gautam Adani Thiruvananthapuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment