Advertisment

பயங்கரவாத தொடர்பு - பயிற்சி - திட்டமிட்டு கொலை: பி.எப்.ஐ மீது அரசின் வழக்குகள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

author-image
WebDesk
New Update
பயங்கரவாத தொடர்பு - பயிற்சி - திட்டமிட்டு கொலை: பி.எப்.ஐ மீது அரசின் வழக்குகள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 22ஆம் தேதி மற்றும் 27ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் மத்திய விசாரணை அமைப்புகளை அதிரடி சோதனை மேற்கொண்டனர். பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டல், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் இந்த அமைப்பு மீது 1,300 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதையடுத்து சோதனை நடைபெற்று கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisment

இதைத்தொடர்ந்து நேற்று மத்திய உள்துறை அமைச்சகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து அறிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் ஆவணத்தின்படி, இந்திய தண்டனைச் சட்டம் உபா, ஆயுத தடை சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து அமைப்புகளுடன் தொடர்புடைய தலைவர்களை திட்டமிட்டு கொலை செய்தல், சந்தேகத்திற்கிடமான பயங்கரவாத முகாம்களை ஏற்பாடு செய்தல், பயங்கரவாதத்தில் இளைஞர்களை ஈடுபடுத்தல், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை, மிஷன் 2047 - இந்தியாவை இஸ்லாமிய அரசாக மாற்றுவதற்கான ஆவணம், கையடக்க கடல் வானொலி செட், பென் டிரைவ்கள், ஐஎஸ் ஆதரவு வீடியோக்கள், வெடிமருந்துகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பி.எப்.ஐ சேர்ந்தவர்கள் குறிப்பாக கேரளாவைச் சேர்ந்தவர்கள் சிலர் இஸ்லாமிய அரசில் சேர்ந்து சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் சிலர் பாதுகாப்பு படையினருடனான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாவும் அவர்கள் தெரிவித்தனர்.

2017ஆம் ஆண்டு கேரளா காவல்துறை கூற்றுப்படி, 6 பி.எப்.ஐ நிர்வாகிகள் அப்துல் கயூம், அப்துல் மனாஃப், ஷபீர், சுஹைல் மற்றும் அவரது மனைவி ரிஸ்வானா, சஃப்வான் ஆகியோர் சிரியாவில் இஸ்லாமிய அரசில் இணைந்ததாக தெரிவித்தனர். இதில், மனாஃப் மற்றும் ஷமீர் சிரியாவில் ஐஎஸ் அமைப்பினருடன் இணைந்து

சண்டையிட்டபோது பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டது பின்னர் தெரியவந்தது.

அதே ஆண்டில், ஐஎஸ் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து அதன் செயல்பாடுகளை பரப்பியதாக கேரளாவைச் சேர்ந்த 8 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதில் சஃப்வான் பெயரும் இடம்பெற்றிருந்தது.

பி.எப்.ஐ அமைப்புக்கு ஐஎஸ் மற்றும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் அமைப்புடனும் தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. என்ஐஏ தற்போது பி.எப்.ஐ மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிரான 19 வழக்குகளை விசாரித்து வருகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆவணத்தில், கடந்த காலங்களில் இந்து தலைவர்கள் கொலை செய்யப்பட்டதில் பி.எப்.ஐ நிர்வாகிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். அதன்படி பிரவீன் நெட்டாரு கொலை (கர்நாடகா, 2022) , ஆர்எஸ்எஸ் பிரமுகர் சஞ்சித் (கேரளா, 2021), நந்து (கேரளா, 2021), வி ராமலிங்கம் (தமிழ்நாடு, 2019), அபிமன்யு (கேரளா, 2018), பிபின் (கேரளா, 2017), சரத் ​​(கர்நாடகா, 2017), ஆர் ருத்ரேஷ் (கர்நாடகா, 2016), பிரவீன் பூஜாரி (கர்நாடகா, 2016) மற்றும் சசி குமார் (தமிழ்நாடு, 2016).

2010ஆம் ஆண்டு கேரளப் பேராசிரியர் டி.ஜே ஜோசப்பின் கையை பி.எப்.ஐயைச் சேர்ந்தவர்கள் வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் வாயிலாக பி.எப்.ஐ சமூகத்தில் கவனம் ஈர்த்தனர். அப்போதைய காங்கிரஸ் அரசு இந்த வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்தது, இது பல நிர்வாகிகளை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் 13 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 11 பேர் விசாரணையில் உள்ளனர். எனினும் முக்கிய குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

2013ஆம் ஆண்டு ஏப்ரலில் கேரள காவல்துறையால் நாரத் (கண்ணூர்) பயிற்சி தளத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக அமைச்சகம் அதன் ஆவணத்தில் குறிப்பிடுகிறது.

பி.எப்.ஐ ரகசியமாக பயிற்சி பெற்று இராணுவம் போன்ற பயிற்சிகளை ஏற்பாடு செய்து சில மத அமைப்புகளுக்கு எதிராக பலத்தை பயன்படுத்த பயிற்றுவிக்கின்றனர். அவைகள் இஸ்லாத்தின் எதிரிகள் என்று கூறி பயிற்சி வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தெலங்கானாவில் உள்ள நிஜாமாபாத்தில் பி.எப்.ஐ ஏற்பாடு செய்த பயிற்சி முகாம் தொடர்பான வழக்கும் என்ஐஏ விசாரித்து வருகிறது. "குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயங்கரவாத செயல்களைச் செய்வதற்கும், மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி அளிப்பதற்காக முகாம்களை ஏற்பாடு செய்தனர்" என்று என்ஐஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment