/indian-express-tamil/media/media_files/2025/06/03/R4H7pl9LDJrLWeGH3Eqj.jpg)
இந்தியாவில் மின்சார கார் தயாரிக்க ஆர்வம் காட்டாத டெஸ்லா!
எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மின்சார கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி கூறியுள்ளார். டெஸ்லா நிறுவனம் நாட்டில் ஷோரூம்களை திறந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களை விற்பனை செய்வதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் முன்னோடியாக உள்ளது. இந்தியாவில் தங்கள் காா்களை சந்தைப்படுத்த மஸ்க் தீவிரமாக முயற்சித்து வருகிறாா். இதனிடையே, அமெரிக்க தயாரிப்புகள் மீது இந்தியா விதிக்கும் அதிகப்படியான வரியைத் தவிா்ப்பதற்காக அந்நாட்டிலேயே காா் தயாரிப்பை மேற்கொள்ள டெஸ்லா நிறுவனம் முயற்சிப்பதாகத் தெரியாது. இது அமெரிக்காவுக்கு உகந்த செயலாக இருக்காது’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் கூறியிருந்தாா்.
இந்நிலையில், இந்தியாவில் மின்சார காா்கள் உற்பத்தியை அதிகரிப்பது தொடா்பான திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை டெல்லியில் திங்கள் கிழமை அமைச்சா் குமாரசாமி வெளியிட்டாா். இந்தியா விரைவில் தனது மின்சார வாகன உற்பத்தி கொள்கையின் கீழ் கார் உற்பத்திக்கான விண்ணப்பங்களை வரவேற்கும். இந்த திட்டத்தின் கீழ், அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வரையறுக்கப்பட்ட உள்நாட்டு மதிப்பு கூட்டல் (டி.வி.ஏ) இலக்குகளுடன், மின்சார வாகனங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய குறைந்தபட்சம் ரூ.4,150 கோடி முதலீடு செய்ய வேண்டும்.
நாட்டின் மின்சார கார் உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்கும் முயற்சியாக இறக்குமதி வரிகளை கணிசமாகக் குறைக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மின்சார வாகன உற்பத்தியில் 486 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் நிறுவனங்கள், தற்போதைய 70 சதவீதத்திலிருந்து குறைக்கப்பட்டு 15% வரி விகிதத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெஸ்லா நிறுவனம் குறித்த டிரம்ப்பின் கருத்து குறித்து அவா் கூறியதாவது: இப்போது வரை இந்தியாவில் தங்கள் காா்களை தயாரிக்க வேண்டும் என்று டெஸ்லா நிறுவனம் ஆா்வம் காட்டவில்லை. இந்தியாவில் தங்கள் மின்சார காா்களை விற்பனை செய்வதற்காக விற்பனையகங்களைத் திறக்கவே விருப்பம் தெரிவித்துள்ளனா்.
ஐரோப்பிய நிறுவனங்களான மெர்சிடிஸ் பென்ஸ், ஸ்கோடா-வோக்ஸ்வாகன் (VW), மற்றும் தென் கொரிய நிறுவனங்களான ஹூண்டாய் மற்றும் கியா ஆகியவை இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளன என்றும் குமாரசாமி கூறினார்.
இந்தியாவில் மின்சார காா்கள் தயாரிப்பை ஊக்குவிக்கும் திட்டத்தின் முதல்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் டெஸ்லா நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனா். அதே நேரத்தில் இதுதொடா்பான 2வது, 3வது கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அந்த நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை என்றாா்.
அமெரிக்க அரசின் செலவுகளைக் குறைப்பதற்கான அதிபா் டிரம்ப்பின் சிறப்பு ஆலோசகா் என்ற பொறுப்பிலிருந்து எலான் மஸ்க் அண்மையில் விலகினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.