/tamil-ie/media/media_files/uploads/2019/07/Thakor.jpg)
Thakor community bans inter-caste marriages, mobile uses
Thakor community bans inter-caste marriages, mobile uses : குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் மிக விசித்திரமான தடைகளை விதித்திருக்கின்றனர் தக்கோர் இன தலைவர்கள். சமீபமாக அப்பகுதியில் அதிகரித்து வரும் கலப்புத்திருமணங்களை நிறுத்துவதற்காக 9 முன் முக்கிய அம்சங்களைக் கொண்ட தீர்மானங்களை சமீபத்தில் நிறைவேற்றியுள்ளனர் .
அதன்படி திருமணமாகாத பெண்கள் போன்களை பயன்படுத்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மாற்று சாதியைச் சேர்ந்த பையனை தக்கோர் பெண் மணந்து கொண்டால் அல்லது காதலித்தால் ஒன்றரை லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை தக்கோர் இன பையன் மணந்து கொண்டால் இரண்டு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக கலப்பு திருமணங்கள் குறையும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் .
12 கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தக்கோர் இனத் தலைவர்கள் இந்த ஒன்பது முக்கிய அம்சங்கள் கொண்ட தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர். இதனை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் தண்டனை வழங்கப்படும் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 12 கிராமங்களை சேர்ந்த திருமணம் ஆகாத பெண்கள் செல்ஃபோன்களை பயன்படுத்துவதை கண்டறிந்தால் அதற்கு அவர்களின் பெற்றோர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
வவ் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ கெனிபென் நாகாஜி தக்கோர் இனத்தை சேர்ந்தவர். இது குறித்து அவர் கூறுகையில், இது நல்ல முடிவு தான். இதனால் தேவையற்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. பெண்களை அவர்களின் பெற்றவர்கள் அடக்கி வைப்பார்கள். ஆண்களை சரி செய்யத்தான் இந்த புதிய விதிமுறைகள் என்றும் அவர் கூறியுள்ளார்.
பனஸ்கந்தா மாவட்டத்தில் இருக்கும் தந்தேவாடா பகுதியில் விதிக்கப்பட்டிருக்கும் இந்த விதிமுறைகள் இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் தேவையற்றது என்றே சமூக செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.