பெற்றோர்களுக்கு 'டைவர்ஸ்' வழங்கிய நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதிய சிறுவன்!

சிறுவனின் பெற்றோர்கள் கடந்த 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதினருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

நீண்ட காலமாக இருந்து வந்த, தன்னுடைய  பெற்றோர்களிடன் பிரச்சனையை தீர்த்து வைத்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து சிறுவன் ஒருவன் கடிதம் எழுதியுள்ளான்.

விபு என்ற சிறுவன், எழுதியிருக்கும் இந்த கடிதம் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த கடித்தத்தில் சிறுவன் கூறியிருப்பது” கடவுள் எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வு வைத்திருப்பார். எல்லா துயரத்துக்கும் ஒரு தீர்வு இருக்கிறது. எல்லா இருட்டிற்கும் வெளிச்சமும் இருக்கிறது. நாளை வரும் நாட்களுக்கு புதிய புதிய திட்டமும் இருக்கிறது” என்று  குறிப்பிட்ட்டுள்ளான்.

இந்த கடிதத்தின் மூலம் சிறுவன் கூற வருவது, எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு உள்ளது. அந்த தீர்வை எனது பெற்றோர்களுக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி என்றி என்று தெரிவித்துள்ளான். அதாவது. சிறுவனின் பெற்றோர்கள் கடந்த 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.   இந்த தம்பதினருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, இவர்கள் இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவகாரத்து வாங்குவதற்காக இருவரும் நீதிமன்ற வாசலில் ஏறியுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து தம்பதினர் இருவரும் தனித்தனியாக வாழ்ந்துள்ளனர். இவர்களின் பிரிவு சிறுவனை வெகுளவில் பாதித்துள்ளது.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,   விவகாரத்திற்கு தாக்கல் செய்துள்ள  தம்பதினரிடம் போதுமான விசாரணை நடத்தப்பட்டதால், அவர்கள் இருவரும் முறைப்படி பிரிந்து வாழலாம் என்றும் 6 மாதத்திற்கு பிறகு அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டு விடும் என்று கூறியுள்ளது.

இந்த தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கு சிறுவன் கடித்கம் எழுதியுள்ளான். அதுமட்டிமில்லாம, நீண்ட காலமாக இருந்த வந்த பெற்றோரின் பிரச்சனையை தீர்த்து வைத்ததிற்கு நன்றியும் கூறியுள்ளான்.

×Close
×Close