179 பாரளுமன்றங்களை உறுப்பினராக கொண்ட இன்டர் பார்லிமென்டரி யூனியனின் 141வது பொதுக்கூட்டம் அக்டோபர் 13 - 17 நாட்களில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் பற்றிய குறிப்புகளை பாகிஸ்தான் தரப்பு சில நாட்களுக்கு முன்பு எழுப்பியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் பேச்சு தற்போது இணையத்தில் பிரபலாமாகி வருகிறது.
லோக்சபா தலைமைச் செயலர் சினேலதா ஸ்ரீவாஸ்தவா முதல் நூற்றுக்கணக்கான ட்விட்டர் பயனர்கள் வரை அனைவரும் கட்சி பேதமையை மறந்து சசி தரூருக்கு ஆதரவு தெரிவித்தன.
சசி தரூர் பேசிய முழு உரை :
"ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்கு, நூற்றுகணக்கான எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பொறுப்பான பாகிஸ்தான் அரசு இன்று காஷ்மீர் மக்களின் உரிமைக் குரலுக்கு போராடுவதாக முகமூடி போடுவது முரண்பாடாக உள்ளது" என்ற சசி தரூரின் பேச்சு அனைத்து சமூக வலைதளங்களிலும் பாராட்டை பெறுகின்றன.
மேலும், " எதிராளியை ஒரு குறுகிய மனப்பான்மையோடு பேசுவதைக் காட்டிலும், இந்த சபை உங்களிடம் நல்ல கருத்தை எதிர்பார்க்கிறது. இந்த சபையில் பேச தீர்மானித்திருக்கும் அம்சங்களை உலக மக்கள் சார்பாக நாம் விவாதிக்க வேண்டும்" என்றும் கூறினார்.
இந்த வீடியோவை , சமூக வலைதளைங்களில் லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
சசி தரூரின் வார்த்தைகளை புரிந்துக் கொள்ள பாகிஸ்தானிற்கு மொழிப்பெயர்ப்பாளர்கள் தேவைப்படுவார்கள் என்றும், உலகளாவிய அம்மைபுகளில் ஒற்றைக் கருத்தில், அரசியல் பேதைமையின்றி வெளிபடுத்திய சசி தரூருக்கு பாராட்டுகளையும் மக்கள் தெரிவித்தனர்.
சசி தரூரின் பேச்சுக்கு, மக்களின் ரெஸ்பான்ஸ்: