New Update
00:00
/ 00:00
Palar River | Andhra Pradesh | Jegan | ஆந்திரா மாநிலம் குப்பம் தொகுதியில் 6,300 ஏக்கர் புதிதாக பாசனம் பெறும் வகையிலும், குப்பம் மற்றும் பலமனேறு தொகுதிகளில் 4.02 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையிலும் குப்பம் கிளை கால்வாயில் இருந்து அம்மாநில முதல் அமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று நீரை திறந்துவிட்டார்.
ராமகுப்பம் மண்டலம் ராஜுபேட்டை கால்வாயில் சிறப்பு பூஜைகள் நடத்தி நீர் திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து, திங்கள்கிழமை (பிப்.26,2024) நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஓய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டி, “இந்தத் திட்டம் தெலுங்கு தேசம் ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டாலும், நமது ஆட்சியில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது” என்றார்.
தொடர்ந்து, “குப்பம் கிளை வாய்க்காலில் இருந்து நீர் திறந்துவிடுவது இப்பகுதியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் என்ற அவர், 2022 செப்டம்பர் 23-ம் தேதி குப்பத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு குப்பம் கிளை கால்வாக்கு அனுமதி அளித்து ஒப்பந்தத்தை தனது பினாமிகளுக்கு வழங்கியதையடுத்து, நாயுடு அதை தனது பாக்கெட்டுகளில் பாயும் பணக் கால்வாயாக மாற்றியது.
எனினும், பின்னாள்களில் போதுமான அளவு பணம் வராததால் அதைக் கைவிட்டார். நாயுடு அதை கைவிட்டாலும், ஹந்த்ரி நிவா திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீசைலத்திலிருந்து 670 கிமீ தொலைவில் உள்ள குப்பத்திற்கு கிருஷ்ணா நீரை கொண்டு வர அரசு கடுமையாக பாடுபட்டது” என்றார்.
தொடர்ந்து, “பாலாற்றில் குறுக்கே தடுப்பணை கட்ட ரூ.215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.