/tamil-ie/media/media_files/uploads/2019/11/The-Ayodhya-Verdict.jpg)
Ayodhya, Ayodhya News, Ayodhya Verdict, Ayodhya case Verdict, Ayothi Case, Ayothi Judgement, ayothi ramar temple, ayothi result, ayothi ramar kovil, அயோத்தி வழக்கு, உச்சநீதிமன்றம், ராமர் கோயில், பாபர் மசூதி
அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின்படி, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயிலை கட்டிக்கொள்ளலாம். மற்றொரு இடத்தில் பாபர் மசூதி கட்டலாம் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளிடையும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயிலை கட்டிக்கொள்ளலாம். அதேபோல், சன்னி வக்பு வாரியம் விரும்பும் இடத்தில் பாபர் மசூதி கட்டிக்கொள்ள 5 ஏக்கர் நிலத்தை மத்திய, உத்தரபிரதேச அரசுகள் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அயோத்தி வழக்கு : 2.77 ஏக்கர் அளவிலான அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், ராமர் இங்குதான் பிறந்தார் என்று இந்துக்களும், நாங்கள் இந்த பாபர் மசூதியில் தான் வழிபாடு நடத்திவந்தோம் என்று இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் தொடுக்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த வழக்கில் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.
அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு : 2010ம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பகவான் ராம்லல்லா விரஜ்மான், நிர்மோஹி அகாரா, மற்றும் உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 2.77 ஏக்கர் நிலத்தை 3 பிரிவினரும் சமமாக பிரித்துகொள்ள அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் 2011 மே மாதம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
பாபர் மசூதி : 1992 ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி, இந்து கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம், சுதந்திரத்துக்கு பிறகான இந்தியாவில், மிக மோசமான சம்பவமாக கருதப்பட்டது. இந்த நிகழ்வின் போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
பகவான் ராம்லல்லா விரஜ்மான் : அயோத்தி வழக்கு தொடுத்த 3 அமைப்புகளில் ஒன்றான பகவான் ராம்லல்லா விரஜ்மான் அமைப்பு, 1993ம் ஆண்டில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் உள்ளிட்ட கடவுள் சிலைகளை வைத்து இந்துக்கள் வழிபாடு நடத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும் அங்கு ராமர் கோயிலை கட்ட தேவையான கட்டுமானப் பொருட்களையும் கொண்டு வந்தது.
கரசேவகர்கள் : இந்து பக்தர்கள் (அல்லது) கரசேவகர்கள், ராமர் கோயிலை கட்டுவதற்காக 1992 டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதியை இடித்தனர். இதன்காரணமாக, நாடுமுழுவதும் பெரும்வன்முறை ஏற்பட்டது.
நிர்மோஹி அகாரா : ராமரை வழிபடும் இந்த அமைப்பினர், அயோத்தி வழக்கில், 1959 முதல் தங்களையும் இணைத்துக்கொண்டனர்.
ஷெபய்ட் : நிர்மோஹி அகாரா அமைப்ப 18ம் நூற்றாண்டு முதல் ஷெபய்ட் என்ற உரிமையை பின்பற்றி வருகிறது. இதன்படி, இந்து கடவுள் சிலைகள் உள்ள பகுதியை கண்காணிக்கும் பணியோடு, அதுதொடர்பான வளங்களை பாதுகாக்கும் பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வந்தது.
உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியம் : 1989ம் ஆண்டில் ராம்ரல்லா அமைப்பால் வைக்கப்பட்ட இந்து கடவுள் சிலைகள் மற்றும் அந்த இடத்தை நிர்மோஹி அகாரா அமைப்பு சொந்தம் கொண்டாடி வந்ததால், சன்னி வக்பு வாரியத்துக்கும், நிர்மோஹி அகாரா அமைப்புக்கும் இடையே பெரும் வாக்குவாதமே நிகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.