உத்தவ் தாக்கரேவிடம் இருந்து முதலில் அதிகாரத்தையும், பின்னர் கட்சியையும் பறித்த பா.ஜ.க, தனது முந்தைய கூட்டாளியை மிக மோசமான தோல்விக்கு ஆளாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது உத்தவ் மீதான தாக்குதலை குறைப்பதற்கான அறிகுறிகளை வெளிபடுத்துகிறது.
2019 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் கலவையான முடிவுகள் வெளியான பின் அம்மாநில பாஜகவின் அனைத்து அதிகார நகர்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், கடந்த வாரம் தெரிவித்த கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அதில், “எங்கள் அரசியல் எதிரிகளை நாங்கள் எதிரிகளாகக் கருதுவதில்லை. உத்தவ் தாக்கரேவும், ஆதித்யா தாக்கரேவும் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர், எங்கள் பாதை வேறு. நாங்கள் எதிரிகள் அல்ல, எங்களுக்கு சித்தாந்த வேறுபாடுகள் உள்ளன” என்று ஃபட்னாவிஸ் கூறினார்.
உத்தவ் தலைமையிலான அரசு கவிழ்ந்ததற்கு பா.ஜ.க காரணம் என கடுமையான குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதன் பின் 1 வருட காலத்திற்கு மேலாக நீடித்த சிவசேனா போராட்டத்திற்கு பின் ஃபட்னாவிஸ் இது குறித்து கருத்து தெரிவித்தார். அதில்,
“மகாராஷ்டிரா அதன் நாகரிக மற்றும் கலாச்சார பண்புகளுக்கு பெயர் பெற்றது, அவை அதன் உள்ளார்ந்த பலம்,” என்று கூறினார்.
ஃபட்னாவிஸ் முன்பு அரசியல்வாதியாக அல்லாமல் ஒரு தலைவராக அறியப்பட்டிருந்தாலும், கடந்த 3 ஆண்டுகளில் அவர்
மென்மையாக பேசும் பாணியை அகற்றியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இல்லாத ஒன்றை “லவ் ஜிஹாத்” போன்ற பிரச்சினைகளை பாஜக எழுப்பி வருகிறது.
எவ்வாறாயினும், பாஜகவுடன் இணைந்திருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சேனா பிரிவுக்கு, சிவசேனாவின் பெயரும் சின்னமும் வழங்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவு, தாக்கரேகளுக்கு சில அனுதாபத்தை உருவாக்கியுள்ளது. இது பாஜகவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே தந்தை பால் தாக்கரேவால் நிறுவப்பட்டது. அன்று முதல் கட்சியும் அவர்களின் குடும்பமும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. மேலும் பல ஆதரவாளர்கள் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை பாகுபாடாகவும் மத்திய பாஜக அரசாங்கத்தின் செல்வாக்குடனும் நடத்தப்பட்டதாக பார்க்கின்றனர்.
இந்நிலையில் உத்தவ் இதை கையில் எடுத்துள்ளார். தனது தந்தையின் பாரம்பரியத்தை பறித்துவிட்டதாக கூறி, பாஜகவை பழிவாங்குவதாக சபதம் செய்து வருகிறார். இதுகுறித்து பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கட்சியின் பெயர் மற்றும் சின்னம் பெறுவதற்கான பிரச்சனை உத்தவ் மற்றும் ஷிண்டே பிரிவினருக்கு இடையே இருந்தது. ஆனால், உத்தவ் ஆதரவாளர்களின் உணர்வுகள் பாஜகவின் இமேஜைக் கெடுக்கும். அதனால் இந்த ஆண்டு பி.எம்.சி தேர்தல் மற்றும் 2024ல் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக பா.ஜ.க அதன் வரைபடத்தை நிச்சயமாக சரிசெய்து கவனமாக பட்டியலிட வேண்டும் என்று கூறினார்.
மற்ற பாஜக தலைவர்கள் கூறுகையில், கட்சியின் நோக்கம் உத்தவ்க்கு பாடம் புகட்டுவதே. 2019-ம் ஆண்டில் பாஜக கூட்டணியை உத்தவ் விட்டுச் சென்றார். என்.சி.பி மற்றும் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். இனி, கட்சி முன்னேற வேண்டும் என்றும் கூறினார்கள்.
சேனா விவகாரத்தில் என்சிபி மற்றும் காங்கிரஸும் பாஜக மீதான தாக்குதலை செய்யவில்லை. என்சிபி தலைவர் அஜித் பவார் கூறியதாவது, “சிவசேனா கட்சியை பால்தாக்கரே நிறுவினார் என்பது உலகம் அறிந்ததே. அதன் வில் மற்றும் அம்பு சின்னம் உத்தவ் சேனாவின் உரிமை. அவர்களின் உரிமைகளை நீங்கள் பறித்தால் அது அநியாயம். மக்கள் அதை விரும்ப மாட்டார்கள்” என்றார்.
காங்கிரஸ் மகாராஷ்டிர தலைவர் நானா படோலே கூறியதாவது, “பாஜக தனது அரசியல் நலன்களுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் தவறாக பயன்படுத்துகிறது. இது அவர்களுக்கு திரும்ப கொடுக்கப்படும்” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/