புதன்கிழமை இரவு பேஸ்புக் நேரலை உரையின் போது உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததால், மகாராஷ்டிராவில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பாஜக உரிமை கோர உள்ளது.
தாக்கரே ராஜினாமா செய்ததை அடுத்து, பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கிய நிலையில், கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் தெற்கு மும்பையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்களின் அடுத்த நகர்வைத் திட்டமிடுவதற்காக ஒரு கூட்டத்தில் திரண்டனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக உயர்மட்டத் தலைவர்கள் தங்கள் அடுத்த நடவடிக்கையை இறுதி செய்ய வியாழக்கிழமை ஒரு கூட்டத்தை நடத்துவார்கள். 39 கிளர்ச்சி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேட்சைகள் அடங்கிய சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஆதரவு அளித்து, தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரும் என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.
கொண்டாட்டத்தில் நிதானமாக இருக்க வேண்டும் என்ற பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், “பாஜக தொண்டர்கள் உத்தவ்ஜியின் ராஜினாமாவைக் கொண்டாடக்கூடாது, தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக வரும்போது கொண்டாட வேண்டும்” என்றார்.
புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து, பாட்டீல் கூறுகையில், “உரிமை கோரும் தேதி மற்றும் பதவியேற்பு தேதியை டெல்லியில் உள்ள மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் முடிவு செய்வார்” என்றார்.
“கட்சித் தலைமை’ ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும். அதைத் தொடர்ந்து புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குழு நியமனம் செய்யப்படும் என்று பாஜக வட்டாரம் தெரிவித்தது. நடைமுறையின்படி, புதிய அரசாங்கம்’ சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
39 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஷிண்டே தரப்பினர் எவ்வாறு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறுவார்கள் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லாததால் சில சட்ட சிக்கல்கள் உருவாகலாம். அதே நேரம், சபையில் புதிய சபாநாயகர் நியமனத்தின் போது தெளிவு ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
39 எம்.எல்.ஏ.க்களுக்கு பாரத் கோகவாலே தலைமைக் கொறடாவாக செயல்படலாம் என்றும், சபாநாயகரை நியமிக்கவும், அவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உதவுவார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. தாக்கரே தலைமையிலான சேனா அணி’ அதன் தலைமை கொறடாவாக அஜய் சௌதாரியை நியமித்துள்ளதால், இது சட்டப்பூர்வ தடையாக இருக்கலாம் என்று மற்றவர்கள் கூறினர்.
இதற்கிடையில், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளை அணுகுவதற்கான பணி’ பாஜக தலைவர்கள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. “நாங்கள் பல நிலைகளில் திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். சட்டப் போராட்டத்தைத் தவிர, மகா விகாஸ் அகாடியை சட்டசபையில் தோற்கடிப்பதை உறுதி செய்வதே எங்கள் முழு கவனமும்,” என்று பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது.
288 பேர் சபையில் (கடந்த மாதம் சிவசேனா எம்எல்ஏ ஒருவர் இறந்த பிறகு 287 ஆகக் குறைந்தது) - பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
சேனாவில் கிளர்ச்சிக்கு முன், மகா விகாஸ் அகாடி (MVA) பலம் 152 - சேனா (55), என்சிபி (53), காங்கிரஸ் (44). சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள், மற்றவர்கள், மீதமுள்ள 29 பேர்.
பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 144 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற வேண்டும். 106 உறுப்பினர்களைக் கொண்ட பா.ஜ.க.வுக்கு பாதி வழியை எட்டுவதற்கு கூடுதலாக 38 எம்.எல்.ஏக்கள் தேவைப்படும். ஷிண்டே அணியில் 39 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“