புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் செல்வம், புதுச்சேரியின் 15-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 5-வது கூட்டம் 31-ம் தேதி காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையுடன் தொடங்க உள்ளது.
ஆகஸ்ட் 2-ம் தேதி காலை 9.30 மணியளவில் நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ரூ.12,700 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்றார்.
மேலும் அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் மத்திய அரசின் நிதி முழுவதுமாக செலவு செய்வது இல்லை என்றும், மக்கள் தொகை குறைவாக உள்ள கட்சத்தீவில் மத்திய அரசின் ஜல் சக்தி திட்டத்தின் மூலம் ரூ.1,500 கோடி நிதி முழுவதுமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் புதுச்சேரிக்கு வழங்கப்பட்ட ரூ.33 கோடி நிதியில் ரூ.1 கோடி மட்டும் செலவிடப்பட்டு மீதமுள்ள ரூ.32 கோடியை அதிகாரிகள் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்” என்றும் கூறினார்.
தொடர்ந்து, “காகிதம் இல்லாத சட்டபேரவைக்கு மத்திய அரசு ரூ.8.16 கோடியை ஒதுக்கியுள்ளதாகவும், இந்த பட்ஜெட்டை காகிதமில்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்ய முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்றார்.
மேலும் இலவச அரிசி வழங்குவதற்காக தலைமை செயலாளர் ஒப்புதல் வழங்கி டென்டர் விடப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“