scorecardresearch

துபாய் உலக சுற்றுலா கண்காட்சி: சபாநாயகர், அமைச்சர்கள் செல்ல அனுமதி மறுப்பு

துபாயில் நடைபெறும் உலக சுற்றுலா கண்காட்சியில் நேரில் பங்கெடுக்க சபாநாயகர், அமைச்சர்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது.

The central government has denied permission to the Speaker to participate in the Dubai Tourism Fair
துபாய் சுற்றுலா கண்காட்சியில் பங்கெடுக்க சபாநாயகருக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது.

புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை காலங்களில் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருகின்றனர்.
கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட தேடப்படும் நகரங்களில் புதுவை முதலிடத்தை பிடித்திருந்தது. இந்த நிலையில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதற்காக உலகளவில் கவனம் ஈர்க்கும் துபாய் பயண சந்தை கண்காட்சியில் சர்வதேச அளவில் புதுவைக்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க அரசு திட்டமிட்டது.
ஆண்டுதோறும் நடைபெறும் துபாய் பயண சந்தை கண்காட்சி இந்த ஆண்டு இன்று தொடங்கி 5ந் தேதி வரை நடக்கிறது.

இந்தக் கண்காட்சியில் புதுவைக்கு என தனி அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. கண்காட்சி அரங்கத்தின் ஏற்பாடுகளை கவனிக்க அமைச்சர் லட்சுமிநாராயணன், சுற்றுலாத்துறை செயலர் ஜவகர், இயக்குனர் பாலாஜி மற்றும் அதிகாரிகளுடன் துபாய் சென்றிருந்தார்.

கண்காட்சியை புதுவை அரங்கை சட்டசபை கேபினட் அறையில் காணொலி மூலம் சபாநாயகர் செல்வம் முன்னிலையில் முதல அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
இந்தக் கண்காட்சி அரங்கத்தை ஐக்கியநாடு அரபு கூட்டமைப்புக்கான இந்திய துõதர் சஞ்சய்சுதிர், மத்திய சுற்றுலாத்துறை செயலர் கியான்பூஷன் ஆகியோர் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர்.

கண்காட்சியில் இடம்பெற்றுள்ள அரங்கில் புதுவையின் பாரம்பரிய வரலாறு, சுற்றுலா தலங்கள், தங்குமிடங்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஆகியன குறித்து விளக்கப்படுகிறது.
வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறும் துபாய் கண்காட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர், தலைமை செயலாளர், அரசு அதிகாரிகள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு சர்வதேச சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுவை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் கண்காட்சியில் பங்கேற்க அரசு ஏற்பாடு செய்திருந்தது.

இதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், அதிகாரிகள் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியது. சபாநாயகர், துணை சபாநாயகர் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.
இருப்பினும் கட்சி வித்தியாசமின்றி எம்எல்ஏக்கள் இன்று துபாய் சென்றனர். அவர்களுடன் துணை சபாநாயகர் ராஜவேலுவும் சென்றார்.

சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், ஆகியோர் துபாய் செல்ல திட்டமிட்டிருந்தனர். அனுமதி கிடைக்காததால் இன்று அவர்களால் செல்ல முடியவில்லை.
ஆனாலும் சொந்த பயணமாக செல்வதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளனர். மத்திய அரசின் அனுமதி கிடைத்தால் அவர்கள் நாளை துபாய் செல்வார்கள்.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: The central government has denied permission to the speaker to participate in the dubai tourism fair