The Congress story in UP: Party adrift, leaders head for exit: செவ்வாய்கிழமை ஆர்பிஎன் சிங் மற்றும் அவருக்கு முன் சில முக்கிய தலைவர்கள் வெளியேறியது உத்திரபிரதேச காங்கிரசுக்குள் ஒரு பெரிய பிரச்சனை இருப்பதன் அறிகுறியாகும். போராட்டத்தில் தொடர்ந்து இருக்க தீவிரமாக முயற்சிக்கும் ஒரு கட்சியைப் பொறுத்தவரை, இந்த வெளியேற்றங்கள் அநேகமாக இந்த தலைவர்களில் பலர் மாநிலத்தில் காங்கிரஸின் வாய்ப்புகள், குறைந்தபட்சம் எதிர்காலத்தில் இருண்டதாக இருப்பதை உணர்ந்ததற்கான அறிகுறியாக இருக்கலாம்.
கட்சியின் ஏழு எம்எல்ஏக்களில், மாநிலத் தலைவர் அஜய் குமார் லல்லு (தைமுகி ராஜ் எம்எல்ஏ) மற்றும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராத்னா மிஸ்ரா ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவரும் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, குறைந்தது 10 முக்கிய முகங்களாவது காங்கிரஸில் இருந்து வெளியேறியுள்ளனர், அவர்களில் பலர் கட்சியில் குறிப்பிடத்தக்க பொறுப்புகளை வகித்துள்ளனர். உதாரணமாக, ஆர்பிஎன் சிங், கட்சியின் நட்சத்திரப் பிரச்சார பேச்சாளர்களின் பட்டியலில் இருந்தார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் AICC காங்கிரஸ் பொறுப்பாளராகவும் இருந்தார். சுப்ரியா ஆரோன் மற்றும் ஹைதர் அலி கான் போன்ற விலகிய பலருக்கு தேர்தலில் போட்டியிட கட்சியில் டிக்கெட் கூட கொடுக்கப்பட்டது. ஆனால் அது அவர்களைத் தடுத்து நிறுத்த போதுமானதாக இல்லை, மேலும், தன்னை கட்சியின் முகமாக சித்தரிக்க பிரியங்கா காந்தியின் முயற்சியும் இல்லை.
இந்தத் தேர்தலுக்கு முன்னதாக முதலில் வெளியேறியவர்களில், மேற்கு உ.பி.யில் காங்கிரஸின் இளம் மற்றும் மிக முக்கியமான முஸ்லீம் முகமான இம்ரான் மசூத் ஆவார். கட்சிக்குள் அவரது விண்மீன் எழுச்சி இருந்தபோதிலும், மசூத் சமாஜ்வாடி கட்சியில் சேர்வதற்காக கட்சியில் இருந்து விலகிவிட்டார். முன்னதாக மசூத் UP காங்கிரஸ் துணைத் தலைவராகவும், AICC செயலாளராகவும் ஆக்கப்பட்டார்.
ஒருமுறை சஹாரன்பூரில் இருந்து சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மசூத், 2014 ஆம் ஆண்டு பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திர மோடிக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்காக முதன்முதலில் கவனம் பெற்றவர். சமாஜ்வாதி கட்சி அவரை இந்தத் தேர்தலில் நிறுத்தவில்லை என்றாலும், ஒவ்வொரு முறையும் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, காங்கிரஸில் பல தேர்தல் தோல்விகளைச் சந்தித்த மசூத், காங்கிரஸ் கட்சியால் தனக்கு அல்லது அவரது ஆதரவாளர்களுக்குத் தேவையான முன்னேற்றத்தைக் கொடுக்க முடியாது என்று நம்புகிறார்.
"காங்கிரஸில் எனக்கு அதிக மரியாதை கொடுக்கப்பட்டது என்பதை நான் மறுக்கவில்லை, ஆனால் உ.பி.யில் வாக்குகள் அடிப்படையில் கட்சிக்கு முன்னேற்றம் இல்லை," என்று மசூத் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார், மேலும், பிஜேபியை எதிர்த்து சமாஜ்வாதி கட்சியால் சிறப்பாக போராட முடியும் என்று தான் நம்புவதாகவும் மசூத் கூறினார்.
மசூத்துக்குப் பிறகு, பரேலி கன்டோன்மென்ட்டில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பரேலி மேயர் சுப்ரியா ஆரோன் வெளியேறினார். முன்னாள் காங்கிரஸ் எம்.பி.,யான அவரது கணவர் பிரவீன் சிங் ஆரோனும், அவருடன் சமாஜ்வாதி கட்சியில் சேர சென்றார். காங்கிரஸ் வேட்பாளராக இருப்பதை விட, சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக சுப்ரியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என பரேலியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். மேலும், காங்கிரஸின் மறுமலர்ச்சிக்காக நீண்ட காலமாகக் காத்திருந்த கட்சித் தலைவர்கள், இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தால், தங்கள் தனிப்பட்ட அரசியல் முடிந்துவிடும் என்று கருதுகின்றனர்.
சுவார் சட்டமன்றத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராம்பூரின் இளைஞரணித் தலைவரான ஹைதர் அலி கான், பாஜக கூட்டணியான அப்னா தளம் (எஸ்) க்கு மாறியபோது கட்சிக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.,வான ஹைதர் அலி கானின் தந்தை, காங்., வேட்பாளராக, ராம்பூர் தொகுதியில், அசாம் கானை எதிர்த்து போட்டியிடுகிறார்.
திரிணாமுல் காங்கிரஸில் சேர முடிவெடுத்த முன்னாள் உ.பி முதல்வர் கமலாபதி திரிபாதியின் கொள்ளுப் பேரனும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லலிதேஷ் பதி திரிபாதியும் (37), காங்கிரஸில் இருந்து வெளியேறினர்; மற்றும் ரேபரேலியில் இருந்து அக்கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான அதிதி சிங், இப்போது பாஜகவுக்கு அந்த இடத்தை வெல்வேன் என்று சபதம் செய்துள்ளார். சஹாரன்பூரில் இருந்து இரண்டு சிட்டிங் எம்எல்ஏக்களான பாஜகவில் இணைந்த நரேஷ் சைனி, மற்றும் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்த மசூத் அக்தர் மற்றும் ரேபரேலி எம்எல்ஏ ராகேஷ் சிங் ஆகியோரும் கட்சியை விட்டு வெளியேறியவர்களில் அடங்குவர்.
அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்து வருவது, காங்கிரஸின் மறுமலர்ச்சி எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும். 2017 ஆம் ஆண்டில், வெறும் ஏழு இடங்களைப் பெற்ற காங்கிரஸின் வாக்கு சதவீதம் 6.25% மட்டுமே, இது கட்சியின் முன் எப்போதும் இல்லாத குறைவான அளவாகும், இது 2012 ஆம் ஆண்டின் 11.65% வாக்குப் பங்கில் பாதி (கட்சி 28 இடங்களை வென்றது) அளவு தான். காங்கிரஸ் கட்சி சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டது, சமாஜ்வாதி கட்சியும் வாக்குப் பங்கில் வீழ்ச்சியைக் கண்டது. அக்கட்சி 2012 இல் கிட்டத்தட்ட 29% இல் இருந்து 2017 இல் 22.23% ஆக குறைந்தது.
காங்கிரஸுக்குள்ளேயே பலர் SP உடனான கூட்டணியில் அதன் வீழ்ச்சியைக் குற்றம் சாட்டுகின்றனர். 2017 தேர்தலில், காங்கிரஸ் 144 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது, மேலும் அதன் தலைவர்கள் பலரை SP தலைமைக்கு நெருக்கமாக கொண்டுவந்தது, ஆனால் கட்சி தனது சொந்த வாக்கு வங்கியை விட்டுக் கொடுத்தது.
பிரியங்கா கட்டளையிட முடிவு செய்திருந்தாலும், அவரது சில பிரச்சாரங்கள் கவனிக்கப்பட்டாலும், கட்சித் தலைவர்கள் இது ஒரு உயரமான ஏணி (இன்னும் செல்ல வேண்டியது நிறைய உள்ளன) என்று ஒப்புக்கொள்கிறார்கள். “தற்போதைக்கு, சுய உந்துதல் உள்ள ஒருவர் மட்டுமே கட்சியில் தொடர முடியும். கோய் புச்னே வாலா நஹி ஹை, கோய் கனெக்ட் கர்னே வாலா நஹி ஹை (கேட்க யாரும் இல்லை, இணைக்கவும் இல்லை)” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.