2018-19 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மகளிருக்காக இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்!

டெல்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2018-19 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மகளிர்களை கவரும் வகையில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

டெல்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2018-19 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மகளிர்களை கவரும் வகையில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

* மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் திட்டம்.

* 8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்குதல்

* வருங்கால வைப்பு நிதிக்கு பணியில் சேர்ந்த முதல் 3 ஆண்டுகளில் பெண்கள் 8% செலுத்தினால் போதுமானது.

* மாற்றுத்திறனாளிகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத்திட்டம்.

* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.75,000 கோடி வரையிலும் நிதி ஒதுக்கீடு.

* மகப்பேறு விடுப்பில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை 26 வாரங்களாக அதிகரிப்பு

* சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் வயதான பெண்களுக்கு உதவி.

* மகளிர் சுயஉதவி குழுக்களை தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் இணைத்தல்.

* வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வழங்க ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்தலை வருவதை கருத்ப்தில் கொண்டு பெண்களை கவரும் வகையில், 2018-19 நிதியாண்டிற்கான பட்ஜெட் அமைக்கப்பட்டுள்ளதாக எதிட் கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஆரோக்கியமான பட்ஜெட் என்று, பெண்களுக்கு மிகவும் பயன் பெறும் வகையில் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

×Close
×Close