பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் ஒன்றுகூட உள்ளனர். அப்போது மகா கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
மேலும் இந்தக் கூட்டம் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலை மனதில் வைத்து நடைபெற உள்ளது. இதில் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர் தரப்பினரும் கலந்துகொள்வார்கள் எனத் தெரியவருகிறது.
மத்திய அரசுக்கு எதிராக டெல்லி ராம் லீலா மைதானத்தில் அவரின் போராட்டம் இதற்கு அடித்தளமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் நம்புகின்றனர். ஏனெனில் அந்தக் கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபலும் இருந்திருந்தார்.
அன்னா ஹசாரே போராட்டத்தின் ஆரம்ப ஆண்டுகளில், அதில் கெஜ்ரிவால் ஒரு முக்கியமான பகுதியாக இருந்தார், பின்னர், ஆம் ஆத்மி முன்னெடுப்பை தொடங்கி ஆட்சியைப் பிடித்தார்.
அப்போதைய காலகட்டத்தில் கபில் சிபல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார். அப்போது கெஜ்ரிவால், அன்றைய காங்கிரஸ் அமைச்சர்கள் பலர் மீதும் ராகுல் காந்தி மீதும் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார்.
அதில் முலாயம் சிங் யாதவ், சரத் பவார், ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோரும் அடங்குவார்கள். தற்போது மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அகிலேஷ் யாதவ்-ஐ கெஜ்ரிவால் சந்தித்துள்ளார்.
தேசியவாதம் மற்றும் இந்துத்துவா ஆகிய இரண்டிலும் பாஜகவை எதிர்த்துப் போராடுவதில் கெஜ்ரிவால் தனது பங்கைச் செய்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை பாஜக அரசு ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தபோது, அந்த நடவடிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களில் ஆம் ஆத்மியும் ஒன்று.
கடந்த வாரம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக இதனை ஓமர் அப்துல்லா சுட்டிக் காட்டினார். இந்த நிலையில் நிதிஷ் குமார் இந்த கூட்டணியை உருவாக்க முயல்கிறார்.
இவர், ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கூட்டணிக்கு மாறி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இந்த மாநாட்டில் எதிரணியின் மற்றொரு நட்சத்திர முகமாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் சரத் பவார் ஆகியோர் இருப்பார்கள்.
எனினும் அவருக்கு காங்கிரஸுடன் இணக்கமான உறவு இல்லை. இருப்பினும் இந்த அணியில் திமுக, ஜார்க்கண்ட் ஜேஎம்எம், தேசிய வாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, ஜேடியூ மற்றும் ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் அரசியல் தேவைக்காக அங்கம் வகிக்கலாம்.
மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டு வேட்பாளர் என்பது பார்க்க நன்றாக தோன்றினாலும் அது சாத்தியப்படுத்தலில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
எனினும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானாவில் வெற்றிப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை காங்கிரஸிற்கு உள்ளது.
தொடர்ந்து, இந்தத் தேர்தல் காங்கிரஸின் பேரம் பேசும் திறனை ஒருவேளை அதிகரிக்கலாம். ஒருவேளை அதே காரணத்திற்காக, பல பிராந்திய கட்சிகள் கூட்டணிக்கு வராமல் கூட போகலாம்.
அதேநேரத்தில் எதிர்க்கட்சி ரேஸிலும் மாயாவதி, சந்திர சேகர் ராவ் உள்ளிட்டோர் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.