Advertisment

பிரக்யா தாக்கூர் உடன் ‘கேரளா ஸ்டோரி’ பார்த்த பெண், முஸ்லீம் காதலனுடன் ஓட்டம்

சாத்வி ஜி ஒரு நாள் முழுவதும், தன் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு, அந்தப் பெண்ணிடம் பேசினார். பின்னர் அந்த பெண் அந்த இளைஞனை விட்டுவிடுவதாக உறுதியளித்தாள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madhya pradesh

இந்த திரைப்படம் கடுமையான விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்பட்டது மற்றும் பல அரசியல் தலைவர்கள், இது ஒரு பிரச்சார படம் என்று கடுமையான ஆட்சேபனைகளை எழுப்பினர்.

போபாலைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு 27 வயது முஸ்லீம் இளைஞனுடன் காதல் மலர்ந்துள்ளது. இதைத் தடுக்க நினைத்த பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர், அந்த பெண்ணை தி கேரளா ஸ்டோரி படம் பார்க்க அழைத்துச் சென்றார். இப்போது வீட்டை விட்டுக் காணாமல் போன அந்த பெண், தன் முஸ்லீம் காதலனுடன் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதுகுறித்து பெண்ணின் தாய் புகார் அளித்ததை அடுத்து, உள்ளூர் போலீசார் வழக்குப்பதிந்து காதலர்களை தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, அந்த இளைஞரின் குடும்பத்தினர், தாங்கள் பழிவாங்கப்படுவோம் என்று பயப்படுவதாகவும், அந்த பெண்ணை தங்கள் வீட்டிற்குள் வரவேற்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.

அந்த பெண், கடந்த மே மாதம் 15ஆம் தேதி தனது குடும்பத்தினரை வீட்டுக்குள் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பினார்.. மேலும் 70,000 ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை காணவில்லை, அவள்தான் எடுத்து சென்றுவிட்டாள் என பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மே 19 அன்று, காணாமல் போனது பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் இந்த விஷயம் திங்களன்று மக்களின் கவனத்தைப் பெற்றது.

போபாலின் கமலா நகர் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி, அனில் பாஜ்பாய், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், இதற்கு முன்பும் பெண் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஒரு நிகழ்வு இருந்தது. அப்போது அவள் தனது சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டதாகவும், தனது கணவருடன் வாழ விரும்புவதாகவும் போலீஸில் தெரிவித்திருந்தார்.

அந்தப் பெண்ணின் தாயார் அளித்த சமீபத்திய காணாமல் போன புகாரில் பேரில், நாங்கள் இப்போது மீண்டும் காணாமல் போன பெண்ணைக் கண்காணிக்க முயற்சிக்கிறோம், அதைத் தொடர்ந்து மற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தனது பகுதியில் சண்டையிட்டதற்காக அந்த இளைஞர் மீது ஏழு-எட்டு கிரிமினல் வழக்குகள் உள்ளது. அந்த பெண் பிரக்யா சிங் தாக்கூருடன் இணைந்து ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தைப் பார்த்தாரா என்பது தனக்குத் தெரியாது என்று பாஜ்பாய் கூறினார்.

27 வயதான இளைஞனின் தந்தை, ஜனவரி மாதம், தன் கையெழுத்திட்ட பிரமாணப் பத்திரத்தை எடுத்து, தனது மகனை சட்டப்பூர்வமாக மறுத்துவிட்டதாக செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தார்.

என் மகனின் செயல்களால் நான் சோர்வடைந்து விட்டேன். அவன் உள்ளூர் மக்களுடன் சண்டையிடுவான், மேலும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தொல்லை செய்வான். நான் என் மகனுக்காக உத்தரவாதம் அளித்தேன், ஆனால் இப்போது நான் கைவிட்டேன். அவன் என் மகன் இல்லை. ​​அவனது செயலால், எனது ஒட்டுமொத்த குடும்பமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, என்றார்.

எட்டு மாதங்களுக்கு முன்பு, இருவரும் அந்த பகுதியில் ஒன்றாக நடந்து செல்வதை பார்த்தபோது தான் இந்த விஷயம் இளைஞரின் குடும்பத்தினருக்குத் தெரிந்தது.

அந்தப் பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் நாங்கள் பயந்தோம். எனவே, சில பொதுவான நண்பர்கள் மூலம் பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு செய்தி அனுப்பினோம். தயவு செய்து மகளை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறினோம். அவள் எங்கள் மகனைத் திருமணம் செய்து கொள்வதை நாங்கள் விரும்பவில்லை, என்று அந்த இளைஞனின் தாய் கூறினார்.

பெண்ணின் தாய் அளித்த புகாரின்படி, அவள் இதற்கு முன்னர் மே 11 ஆம் தேதி காணாமல் போனார்.  அப்போது குடும்பத்தினர் போலீசில் புகார் அளிக்க முயன்றபோது, ​​அந்த பெண் புர்கா அணிந்து வந்து, காதலரை திருமணம் செய்து கொண்டதாக தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

பிறகு, மே 15 ஆம் தேதி, அவர் தனது குடும்பத்தினரை வீட்டிற்குள் பூட்டிவிட்டு மீண்டும் காணாமல் போனார் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

போபால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிகாரியை சந்திக்க  அமர்ந்திருந்த பெண்ணின் 48 வயது தந்தை, எங்கள் மகள் எங்கள் பேச்சை கேட்க மறுத்துவிட்டாள், என்று கண்கலங்கினார்.

மகளின் காதல் உறவு குறித்து தெரியவந்ததும், அவளுக்கு வேறு திருமணம் செய்து வைக்க பெண்ணின் குடும்பத்தினர் முயற்சித்தனர்.

மே 11 அன்று, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்காக மத்தியப் பிரதேச அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கௌரவி ஒன் ஸ்டாப் க்ரைஸிஸ் சென்டருக்கு அவர்கள் அவளை அழைத்துச் சென்றனர்.

நாங்கள் எங்கள் மகளை உள்ளூர் ஆலோசகர்களிடம் அழைத்துச் சென்றோம்… ஆலோசனை மையத்தில், என் மகள் அவளது நகைகளை கழற்றி எங்களிடம் கொடுத்தாள்,அந்த ஆணுடன் இருக்க அனுமதிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டினார், என்று பெண்ணின் தாய் (45) கூறினார்.

ஆலோசனை அமர்வுக்குப் பிறகு, பெண் முதல் முறையாக காணாமல் போனதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இருப்பினும், அவள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டாள்.

பின்னர், அவளை பாஜக எம்பி பிரக்யா தாக்கூரிடம் அழைத்து சென்று ஆலோசனை நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

தாக்கூருக்கு நெருக்கமான ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில் பெண்ணின் குடும்பம் சாத்வி ஜியை ஆலோசனைக்காக அணுகியிருந்தது. அவள் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் செய்ய மறுத்து வந்தாள்.

சாத்வி ஜி ஒரு நாள் முழுவதும், தன் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு, அந்தப் பெண்ணிடம் பேசினார். பின்னர் அந்த பெண் அந்த இளைஞனை விட்டுவிடுவதாக உறுதியளித்தாள். அடுத்த நாளே, சாத்வி ஜி அந்தப் பெண்ணை, அந்தப் பகுதியைச் சேர்ந்த பல பெண்களுடன், ஒரு திரையரங்கில் கேரள ஸ்டோரி படம் பார்க்க அழைத்துச் சென்றார்.

ஆனால், பெண் காணாமல் போன செய்தி சாத்வி ஜிக்கு தெரிந்ததும் மிகவும் வருத்தமடைந்தார். இந்த சம்பவம் இப்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம், என்றார்.

இந்த உறவின் சாத்தியமான விளைவுகளைப் பற்றி தாங்கள் கவலைப்படுவதாக அந்த இளைஞரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது குடும்பத்தினர் எங்களை மிரட்டி வருகின்றனர். நாங்கள் அந்த பெண்ணை எங்கள் வீட்டிற்குள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், என்று அவரது சகோதரி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Madhya Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment