இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் இந்த ஆண்டின் டாப் 100 சக்திவாய்ந்த இந்தியர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு 13ஆவது இடத்தில் இருந்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த முறை 6ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி நீடிக்கிறார். இந்தக் கட்டுரையில் மிக முக்கியமான 10 இந்தியர்கள் பிடித்த இடங்களைப் பற்றி பார்ப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி
கொரோனா பெருந்தொற்று, விவசாயிகள் போராட்டம், பொருளாதார நெருக்கடி நிலை, மேற்கு வங்க தேர்தலில் தோல்வி என பல பிரச்சினைகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு எதிர்கொண்ட போதிலும், சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இது பிரதமர் மோடிக்கு இருக்கும் செல்வாக்கையே காட்டுகிறது.
மேலும், 183 கோடி இந்தியர்களுக்கு குறைந்தது ஒரு கொரோனா தடுப்பூசியாவது செலுத்தப்பட்டிருப்பதும் சாதனையாக கருதப்படுகிறது. உக்ரைனிலிருந்து சுமார் 22,000 இந்தியர்களும் பிரதமர் மோடியின் முயற்சியால் பத்திரமாக தாய்நாட்டுக்கு மீட்டுக் கொண்டு வரப்பட்டனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா
பாஜகவின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா இருந்தும், பாஜகவில் அதிக செல்வாக்கு உள்ளவராக அமித் ஷா இருந்து வருகிறார்.
உத்தரப் பிரதேச தேர்தலுக்கு பல்வேறு உத்திகளை வகுத்து கொடுத்தவரும் அமித் ஷா தான் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த குஜராத்தில் பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், இவரது பங்களிப்பு அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி
தொழிதிபர் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் இருப்பவர். இந்திய கோடீஸ்வரர்களில் முன்னணியில் இருப்பவர்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை, சோலார் பேனல்கள் ஆகியவற்றிலும் இவரது ரிலையன்ஸ் நிறுவனம் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. 64 வயதாகும் இவர், செல்வாக்குமிக்க இந்தியர்களின் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளார்.
யோகி ஆதித்யநாத்
49 வயதாகும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக உத்தரப் பிரதேச தேர்தலில் வெற்றி வாகை சூடி அரியணையில் அமர்ந்தார்.
1985ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த முறை உத்தரப் பிரதேசத்தில் பாஜகவை ஆட்சியைப் பிடிக்க வைத்ததில் முக்கியப் பங்காற்றியவர்.
விலை ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை இருந்தபோதிலும் கட்சியின் தலைமையிடமும், மக்களிடம் நம்பிக்கையை சம்பாதித்திருக்கிறார் யோகி.
அரவிந்த் கெஜரிவால் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில்
முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் அரவிந்த் கெஜரிவால்.
கோவாவிலும் இரண்டு தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்த ஆண்டு இறுதியில் இவரது தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி குஜராத், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநில சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது. இவர் 27 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
தமிழகத்தைச் சேர்ந்தவரும் மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன், 9ஆவது இடத்தை பிடித்துள்ளார். இந்தியா உலக அளவில் தற்போது வேகமாக வளர்ந்து பொருளாதார நாடுகளில் 6ஆவது இடம் பிடித்ததில் முக்கியப் பங்காற்றியவர்.
என்.சந்திரசேகரன்
டாடா குழுமத்தின் தலைவரான என். சந்திரசேகரன் இந்தப் பட்டியலில் 22ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். பாரம்பரிய வணிகத்திலிருந்து பெரிய மாற்றத்தை புகுத்தி முக்கியப் பங்காற்றி வருகிறார்.
ஏர் இந்தியாவை மீண்டும் டாடா குழுமத்துடன் இணைத்ததில் முக்கிய பங்காற்றினார். அத்துடன், ஏர் இந்தியாவின் தலைவராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.
மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சக்திவாய்ந்த இந்திய தலைவர்கள் பட்டியலில் 28ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை திமுக பெற்றது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது திமுக. நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றியை இவரது தலைமையிலான திமுக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
டி.வி.சோமநாதன்
தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.சோமநாதன் மத்திய நிதி மற்றும் செலவின செயலராக உள்ளார்.
மத்திய நிதி அமைச்சகத்தில் உள்ள முக்கியமான 5 நிதி செயலர்களில் சோமநாதன் முக்கியமானவர் ஆவார்.
மதப் பிளவு இந்தியாவின் ஐ.டி. தலைமையை அழிக்கும்: கிரண் மஜூம்தார் ஷா வேதனை!
கொரோனாவுக்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான திட்டத்தை வகுத்ததிலும் முக்கியப் பங்காற்றினார்.
ராகுல் காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி, இந்தப் பட்டியலில் 51ஆவது இடத்தில் உள்ளார். பாஜகவுக்கு எதிரான குரல் கொடுத்து வருபவர். அவர் மீண்டும் காங்கிரஸ் தலைவராக ஆவாரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் இல்லை. அவரும் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil