/tamil-ie/media/media_files/uploads/2023/08/Electrict-Meter.jpg)
புதுச்சேரியில் புதிய மின்சார கட்டணம் ஜூன் 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் வீடுகளுக்கான மின் கட்டணம் மட்டும் மீண்டும் உயர்த்தப்படுகிறது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு பழைய மின் கட்டணமே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்துக்கு ஒரு யூனிட்டுக்கு சராசரியாக 50 பைசா முதல் 75 பைசா வரை உயர்த்தவும், வர்த்தக பயன்பாட்டுக்கு சராசரியாக ஒரு ரூபாய் வரை கட்டணம் உயர்த்தவும் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் புதுச்சேரி மின்துறை விண்ணப்பித்திருந்தது.இதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கான முன் கட்டணம் ரூ.2.25-ல் இருந்து ரூ. 2.70 ஆக உயர்த்த அனுமதி தரப்பட்டுள்ளது. 101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் ரூ. 3.25-ல் இருந்து ரூ. 4 ஆகவும் 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு தற்போது வசூலிக்கப்படும் ரூ.5.40-ல் இருந்து ரூ. 6 ஆகவும் 301 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கும் வீடுகளுக்கான கட்டணம் ரூ. 6.80-ல் இருந்து ரூ. 7.50 ஆகவும் உயர்த்த புதுச்சேரி அரசு கோரியதை ஆணையம் அனுமதித்துள்ளது.
வணிக கட்டணத்தை உயர்த்த அனுமதி தரப்படவில்லை. பழைய கட்டணமே தொடரும். அதேசமயம் நிலைக்கட்டணம் 1 கிலோவாட் ரூ. 75-ல் இருந்து ரூ. 200 ஆக உயருகிறது. இக்கட்டண உயர்வு ஜூன் 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.