Advertisment

அடுத்த காங்கிரஸ் தலைவர்: அசோக் கெலாட்டை பரிசீலிக்கும் நேரு குடும்பம்

24 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு - நேரு குடும்பத்தினர் அல்லாத ஒருவரை தலைமைப் பதவிக்கு தேர்ந்தெடுப்பதன் மூலம், வாரிசு அரசியல் மீதான பாஜகவின் தாக்குதலை காங்கிரஸ் மழுங்கடிக்க முடியும் என்று நம்புகிறது.

author-image
WebDesk
New Update
அடுத்த காங்கிரஸ் தலைவர்: அசோக் கெலாட்டை பரிசீலிக்கும் நேரு குடும்பம்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், நேரு-காந்தி குடும்பத்தின் தேர்வாக சோனியா காந்திக்குப் பின் காங்கிரஸ் தலைவராக பதவியேற்க உள்ளதால், தலைமைப் பதவிக்கான போட்டிக்கான வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. 71 வயதான கெஹ்லாட் காந்திகளின் (ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி) வெளிப்படையான ஆதரவுடன் வேட்புமனுவை தாக்கல் செய்தால், ஜி-23 அவரை எதிர்க்க ஒரு வேட்பாளரை நிறுத்தலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisment

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடர்பான அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கிட்டத்தட்ட காங்கிரஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான சரியான தேதி அட்டவணையை அங்கீகரிக்க நடைபெறும் என்று காங்கிரஸ் புதன்கிழமை அறிவித்தது. மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோருடன் இந்த முக்கியக் கூட்டத்துக்குத் தலைமை தாங்குகிறார்.

மூன்று முறை முதலமைச்சராக இருந்த அசோக் கெஹ்லாட்டை சோனியா காந்தி சந்தித்த ஒரு நாள் கழித்து, காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவைக் கூட்ட முடிவு எடுக்கப்பட்டது. ராகுல் காந்தி மீண்டும் தலைமைப் பதவிக்கு வர விரும்பாத நிலையில், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு ராஜஸ்தான் முதல்வரிடம் சோனியா கூறியதாக கூறப்படுகிறது. அவர் காங்கிரஸ் கட்சித் தலைவராக பதவியேற்கும் பட்சத்தில் முதல்வர் பதவியை விட்டு விலக வேண்டி வரலாம் என்பதால் கெலாட் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸைப் பொறுத்தவரை, கெஹ்லாட் பல விஷயங்களில் பொருத்தமானவர்.

24 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு - நேரு குடும்பத்தினர் அல்லாத ஒருவரை தலைமைப் பதவிக்கு தேர்ந்தெடுப்பதன் மூலம், வாரிசு அரசியல் மீதான பாஜகவின் தாக்குதலை காங்கிரஸ் மழுங்கடிக்க முடியும் என்று நம்புகிறது. காங்கிரஸ் கட்சியின் விமர்சகர்கள் அவர் நேரு குடும்பத்தினரின் தேர்வு என்று கூறினாலும், துல்லியமாக கெஹ்லாட் வெறும் குடும்பத்தை தக்கவைப்பவர் அல்ல என்றாலும், அவரால் ராகுலுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.

அவர் உறுதியான விசுவாசியாக இருந்தாலும், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு நல்ல சவாலாக இருக்க வேண்டுமானால், இந்தி இதயப் பகுதியில் காங்கிரஸின் மிக முக்கியமான முகமாக அவர் இருக்கிறார். அவர் ஒரு ஓ.பி.சி தலைவர். பாஜக தீவிரமாக ஓ.பி.சி பிரிவினரைக் கவர்ந்து வருகிறது; மேலும், கடந்த காலத்தில் பல மாநிலங்கள் மற்றும் அமைப்புகளின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள அவருக்கு நல்ல கட்சி அனுபவமும் உள்ளது.

கெலாட் காங்கிரஸ் தலைவராக உயர்த்தப்பட்டால், ராஜஸ்தானில் நிலவும் கோஷ்டி மோதலைத் தீர்க்க தலைமைக்கு வாய்ப்பளிக்கிறது. கெலாட்டின் போட்டியாளரான முன்னாள் துணை முதல்வரான சச்சின் பைலட்டை, சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு முதல்வராக உயர்த்துவோம் என்று ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. கெஹ்லாட்டை டெல்லிக்கு மாற்றுவதன் மூலம் சச்சின் பைலட்டுக்கு மாநில அரசியலில் வழி கிடைக்கும்.

இருப்பினும், ஜி-23 குழு வட்டாரங்கள், எதிர்ப்பு கட்டாயமாக இருக்கும் என்பதற்கான சாத்தியத்தை நிராகரிக்கவில்லை. கடந்த 2001-ம் ஆண்டு சோனியாவை எதிர்த்து ஜிதேந்திர பிரசாத் போட்டியிட்டபோதுதான் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு உண்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. அவர் 94 வாக்குகளைப் பெற்று 7,448 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

1997 ஆம் ஆண்டில், சீதாராம் கேசரி ஜாம்பவான்களான சரத் பவார் மற்றும் ராஜேஷ் பைலட் ஆகியோரின் எதிர்ப்பை சந்தித்தார். சரத் பவார் 882 வாக்குகளும் மற்றும் ராஜேஷ் பைலட் 354 வாக்குகளும் பெற்றதால், அவர்களை 6,224 வாக்குகளைப் பெற்று அவர் எளிதாக தோற்கடித்தார்.

2000-ம் ஆண்டிலிருந்து சோனியாவும், ராகுலும் எதிர்ப்பை சந்திக்கவில்லை.

இது ஒரு கடுமையான மோதலாக இருந்தாலும், ஜி-23 அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்துவது, அது மூத்த கெஹ்லாட்டாக இருந்தாலும், ஒரு அரசியல் புள்ளியை நிரூபிக்க முக்கியமானது. ஜி-23 அதுதான் அமைப்பு மற்றும் கட்சியை நடத்தும் பாணி என்று நம்புகிறது. அது மாற்றம் அவசியம் என்றும், மாற்ற வேண்டியது முகம் அல்ல என்று வலியுறுத்துகிறது.

ஜம்மு காஷ்மீர் பிரச்சாரக் குழுத் தலைவர் பதவியை குலாம் நபி ஆசாத் நிராகரித்ததும், இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வழிநடத்தல் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஆனந்த் சர்மா ராஜினாமா செய்ததும் வரவிருக்கும் விஷயன்களின் அடையாளம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் ஜி-23 வேட்பாளர் யார்? என்று கேட்டால், அதில் ஆசாத் ஆர்வம் காட்டவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல, சர்மாவும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறுகிறார்கள்.

அந்த போட்டி வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்.பி.க்களான சசி தரூர் அல்லது மணீஷ் திவாரியாக இருக்கலாம் என்று அக்கட்சியின் சில தலைவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் இருவரும் முன்னாள் மத்திய அமைச்சர்கள். மணீஷ் திவாரி 1988-93 க்கு இடையில் மாணவர் அணி தலைவராகவும் பின்னர், 1998-2000 இல் இளைஞர் காங்கிரஸுக்குத் தலைமை தாங்கி மேலே வந்தவர். இந்த கால கடங்கள் காங்கிர்ஸ் கட்சியின் சமீபத்திய வரலாற்றில் கொந்தளிப்பான காலகட்டங்களாக இருந்தன.

G-23 தலைவர்கள் அதிகாரப் பரவலாக்கம், கூட்டு முடிவெடுக்கும் அமைப்புமுறை (நாடாளுமன்ற வாரியம்) புத்துயிர் பெறுதல் மற்றும் மாநில அலகுகளுக்கு அதிகாரமளித்தல் போன்ற யோசனைகளுக்கான நேரம் வந்துவிட்டது என்று நம்புகிறார்கள்.

ஆனால், ஒரு வேட்பாளரை நிறுத்துவது என்பது முடிவெடுப்பதை விட எளிதானது. மக்கள் பிரதிநிதி அமைப்பு மற்றும் காங்கிரஸ் கட்சி மீது குடும்பத்தின் பிடிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் நுட்பமான ஆதரவைப் பெற்ற வேட்பாளர் ஒரு நிச்சயமான நன்மையைப் பெறுவார். சரத் பவாராலும், ராஜேஷ் பைலட்டாலும் கூட சீதாராம் கேசரியை தோற்கடிக்க முடியவில்லை. எதிர்த்து போட்டியிடுபவருக்கு சில அச்சம் இருக்கிறது. சவால் செய்பவர், அவர் நேரு குடும்பத்தின் அதிருப்தியையும் சம்பாதிக்கலாம்.

இதற்கிடையில், கெலாட் தன்னை காங்கிரஸ் தலைவராக்கலாம் என்ற பேச்சைக் குறைத்து மதிப்பிட்டு கூறினார். “இது நீண்ட காலமாக ஊடகங்களில் பரவி வருகிறது. நீங்கள் அதைப் பற்றி பேசிக்கொண்டே இருங்கள். என்ன முடிவு எடுக்கப்படும் என்று யாருக்கும் தெரியவில்லை” என்றார்.

தற்போது வரவிருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான மூத்த பார்வையாளர் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் ஆகிய இரண்டு பொறுப்புகளில் கவனம் செலுத்துவதாக கெலாட் கூறினார். “இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் யாராவது உங்களுக்கு விளக்கம் அளித்தார்களா? அப்படி யாரும் செய்யவில்லை. ஊடகங்கள் தொடர்ந்து ஊகங்களை வெளியிட்டு வருகின்றன. முடிவெடுக்கும் வரை நீங்களும், நானும் கருத்து தெரிவிக்க முடியாது” என்று கெலாட் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment