ஓட்டப் பயிற்சியில் சுருண்டு விழுந்து காவலர் உயிரிழப்பு; டி.ஜி.பி. இறுதி அஞ்சலி

புதுவையில் ஒட்டப் பயிற்சியின் போது பயிற்சி காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுவையில் ஒட்டப் பயிற்சியின் போது பயிற்சி காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
The Police died during a running practice in Puduvai

உயிரிழந்த காவலர் விஜய்

புதுச்சேரி நெட்டப்பாக்கம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 26). இவர் கடந்த ஆண்டு மே மாதம் 2022-ம் ஆண்டு புதுவை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

Advertisment

தற்போது கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி ஓட்ட பயிற்சியின் போது விஜய் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது நிலையில், சிகிச்சை பலனின்றி விஜய் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையே,இறந்த பயிற்சி காவலர்க்கு டிஜிபி மனோஜ் குமார் லால் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்தினர்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: