scorecardresearch

புதுவையில் உச்சம் தொட்ட மதுபான வருவாய்: ஒரே ஆண்டில் ரூ 1500 கோடி

புதுச்சேரி மாநிலத்தில் முதன் முறையாக கலால்துறை வருவாய் ரூ. 1,393 கோடியாக உயர்ந்துள்ளது.

The Puducherry government has earned Rs 1393 crore from the sale of liquor
புதுச்சேரி அரசுக்கு மது விற்பனை மூலம் 1393 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 496 மதுக்கடைகள், 95 சாராய கடைகள், 74 கள்ளுக்கடைகள் உள்ளன. கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது மதுபானங்களுக்கு 20 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது.

இதனால் மதுபானங்களின் விலை உயர்ந்தது. புதுவையில் உள்ள 4 பிராந்தியங்களின் அருகில் உள்ள மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா பகுதிகளை விட பல முன்னணி நிறுவனங்களின் மது வகைகள் இங்கு கிடைப்பதால் மதுபானங்கள் விற்பனை மூலம் கலால்துறைக்கு ஆண்டுதோறும் வருவாய் உயர்ந்து வருகின்றது.

கடந்த 2017-2018ல் ரூ.769.96 கோடியாக இருந்த மதுபான வருவாய் ஆண்டுதோறும் உயர்ந்தது. கொரோனா காலத்தில் வருவாய் குறைந்தது. தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
கடந்த 2021-ல் ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை தொட்டது. தற்போது முதன் முறையாக கலால்துறை வருவாய் ரூ. 1,393 கோடியாக உயர்ந்துள்ளது.

இது கடந்த நிதியாண்டை விட ரூ.321 கோடி அதிகமாகும். இதில் சாராயக்கடைகள் மூலம் ரூ.100 கோடியும் கள்ளுக்கடைகள் மூலம் ரூ.1 கோடியும் கிடைத்து உள்ளது.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: The puducherry government has earned rs 1393 crore from the sale of liquor

Best of Express