அயோத்யாவில் நிச்சயம் ராமர் கோவில் மீண்டும் கட்டப்படும் - ஆர்.எஸ்.எஸ் தலைவர்

நீதி மறுக்கப்பட்டால் அயோத்தியில் மீண்டும் ஒரு மகாபாரதப் போர் நடக்கும் என சர்ச்சைப் பேச்சு...

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூன்று நாள் கருத்தரங்கம் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று புத்தங்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத். அயோத்யாவில் ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும் என்று அவர் பேசினார்.

20/09/2018 அன்று எழுத்தாளர் ஹேமந்த் ஷர்மா அவர் எழுதிய அயோத்யா கா சாஸ்ம்தீத் (Ayodhya ka Chasmdeed) மற்றும் யுத்தா மே அயோத்யா (Yuddha Me Ayodhya) புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித் ஷா, மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அயோத்யா ராமர் கோவில்

புத்தகத்தை வெளியிட்டு பேசிய மோகன் பகவத் “கர்வம் மற்றும் இறுமாப்பின் காரணமாக உண்மையும் நீதியும் மறுக்கப்படுமானால் அயோத்யாவில் மீண்டும் மகாபாரதப் போர் நடைபெறும். நடக்காமலும் போகலாம் ஆனால் நடந்தால் அதை யாரால் தடுக்க இயலும் என்று கேள்வி கேட்டுள்ளார்.

மிக சமீபத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் கடந்த புதன் கிழமையன்று (19/09/2018) அயோத்தியா ராமனின் பிறப்பிடம். இங்கு ராமனின் கோவில் இடிக்கப்பட்டது. ஆனால் நிச்சயம் இங்கு மீண்டும் ராமனுக்கு கோவில் கட்டப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

உண்மையையும் நீதியையும் மறுப்பது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பொய்களையும் அநீதிகளையும் பின்பற்றி சென்றால் வன்முறைகளும் கலவரங்களும் தான் நடைபெறும். நீதி இருக்கும் இடத்தில் அமைதி நிலவுகிறது.

நீதி உண்மையும் அமைதியும் இருக்கும் இடத்தில் இருக்கிறது என்று அவர் கூறினார். உண்மையை நாம் எதிர் கொள்ள வேண்டும். நீதியை நாம் உடன்க்குடன் வழங்க வேண்டும். தாமதமான நீதி வேலைக்காகது என்றும் அவர் பேசினார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

ராமர் கோவில் விருப்பம் தெரிவிக்கும் ஆர்.எஸ்.எஸ்

மேலும் “ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அயோத்தியாவில் ராமரின் கோவிலை மிக விரைவில் கட்ட வேண்டும் என்று விரும்புகிறது. ராம் ஜென்மபூமி என்ற அமைப்பு தான் அயோத்தியாவில் இருந்த பாபர் மசூதியினை இடித்தனர். அவர்கள் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. உண்மை எதுவோ அதையே நாம் உணர முற்பட வேண்டும் என்றும் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

ராஜ்நாத் சிங் நிகழ்ச்சியில் பேசும் போது “ராமனுக்கோ 14 வருடங்கள் தான் வனவாசம். ஆனால் அயோத்தியா 500 ஆண்டுகளுக்கும் மேலாக வனவாசம் இருக்கிறது” என்று கூறினார்.

அமித் ஷா பேசும் போது “ராம ராஜ்ஜியம் என்றால் நல்ல ஆட்சி என்று தான் அர்த்தம். அயோத்தியாவையும் ராமனையும் பிரித்து வைக்க இயலாது. ராமன் என்பவர் எப்போதும் நல்ல அரசனுக்கான அடையாளம். ஜனநாயத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் மக்களின் செண்டிமெட்டே எங்கும் வெற்றி பெறுகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close