பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தனது வழக்கமான பாதயாத்திரைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதிலிருந்து விலகி, கட்சியின் தலைவர் மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த் தலைமையில் 14 நாள் சர்வஜன் ஹிதாய் சர்வஜன் சுகாய் சங்கல்ப் யாத்திரையை புதன்கிழமை (ஆக.16) தொடங்கியது.
இது, ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் உத்தியில் ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.
கட்சி வட்டாரங்களில் மாயாவதியின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் ஆனந்த், கடந்த ஆண்டு முதல் ராஜஸ்தானில் கட்சி விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்து வருகிறார்,
அவர் கட்சியின் அமைப்பு பலத்தைப் புரிந்துகொள்வதற்காக மாநிலம் முழுவதும் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாளில் சுற்றுப்பயணம் செய்து ஆல்வாரில் 13 கிமீ யாத்திரையில் பங்கேற்றார்.
அதிகாரப்பூர்வமாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான ஆகாஷ், அடுத்த இரண்டு வாரங்களில் 3,000 கிமீ தூரத்தை கடந்து 100 சட்டமன்றத் தொகுதிகளில் பயணம் செய்து பல்வேறு இடங்களில் உரையாற்றுகிறார்.
2018 ஆம் ஆண்டில் அக்கட்சி வென்ற ஆறு இடங்களும் அதன் அனைத்து எம்எல்ஏக்களும் பின்னர் காங்கிரஸில் இணைந்தனர்.
அதன் வேட்பாளர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஒன்பது இடங்களும் இதன் கீழ் வருகிறது. மேலும் இந்த யாத்திரை தோல்பூரில் இருந்து தொடங்கிய யாத்திரை ஆகஸ்ட் 29-ம் தேதி ஜெய்ப்பூரில் நிறைவடைகிறது.
பேரணியுடன் தொடங்கிய இந்த யாத்திரை 33 மாவட்டங்களில் பயணிக்கவுள்ளது. இது குறித்து மாநில பிஎஸ்பி தலைவர் பகவான் சிங் பாபா, “ஆனந்த் வெவ்வேறு இடங்களில் பேரணிகளில் இணைந்துக் கொள்வார்” எனத் தெரிவித்தார்.
தோல்பூரில் ஆகாஷ் காங்கிரஸை குறிவைத்தார். அப்போது, “ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசு சமூக விரோதி அரசு. லட்சக்கணக்கான வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.3,500 அகவிலைப்படியும், ஏழைகளுக்கு குறைந்த விலையில் காஸ் சிலிண்டர்களும், பெண்களுக்கு இலவசக் கல்வியும் வழங்கப்படும் என்று காங்கிரஸ் அரசு வாக்குறுதி அளித்தது.
வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் ஒருமுறை தேர்தல் முடிவுகள் வரவுள்ளன. காங்கிரஸ் தலைவர் மீண்டும் உங்கள் மத்தியில் வாக்குறுதிகளை அளிப்பார். அந்த பொய்யான வாக்குறுதிகள் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள்” என்றார்.
அவர் மேலும், “நான் உங்களை எச்சரிக்க வந்துள்ளேன். அது காங்கிரஸாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, இரண்டும் ஒன்றுதான். 2014ல் மக்கள் வாக்குகளுக்காக ஏமாற்றப்பட்டனர். இன்று, நாடு வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்தின் பாதிப்பை எதிர்கொள்கிறது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சாலைகளில் இறங்கியவர்கள், இன்று பெட்ரோல் விலை உயர்வை நினைத்து வருத்தப்படவில்லை” என்றார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் மட்டுமல்ல. மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் மற்ற மாநிலங்களிலும் பிஎஸ்பிக்கு ஆகாஷ் முக்கியப் பங்காற்றுகிறார்.
ஆகஸ்ட் 9 அன்று, ஆகாஷ் போபாலில் நடைப்பயணத்தை வழிநடத்தினார். ராஜ்பவனை முற்றுகை செய்யும் முயற்சிக்கு தலைமை தாங்கினார்.
7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆகாஷ் கடந்த சில மாதங்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அடிக்கடி சென்று அமைப்பு கூட்டங்களை நடத்துகிறார்.
இதற்கிடையில், ஆகாஷின் வழிகாட்டுதலின் பேரில், ஏப்ரல் 26 முதல் ஆகஸ்ட் 1 வரை 80 சட்டமன்றத் தொகுதிகளில் யாத்திரை சென்றதாக பிப்பல் கூறினார்.
கைவிடப்பட்ட ஆர்ப்பாட்ட கலாசாரம்
பகுஜன் சமாஜ் தற்போது ஆர்ப்பாட் கலாசாரத்தை கைவிட்டு வருகிறது. கடைசியாக மாயாவதி தொடர்பான கருத்துக்களுக்காக பாஜக தலைவர் தயா சங்கர் சிங்கை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தியது.
கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நசிமுதீன் சித்திக் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். தற்போது சித்திக் காங்கிரஸ் கட்சியில் உள்ளார்.
கடந்த ஆண்டு உ.பி., சட்டசபை தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, உள்ளிருப்பு மற்றும் பொது போராட்டங்களை தவிர்க்குமாறு மாயாவதி தொண்டர்களிடம் கூறினார்.
தொடர்ந்து, மீண்டும் இதனை நியாபகப்படுத்தும் விதமாக நீங்கள் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டியதில்லை” என்றார்.
பிஎஸ்பி உள்விவகாரங்களின்படி, மாயாவதி நீண்ட காலத்திற்கு ஆகாஷை வளர்த்து வருகிறார். மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ், 2017ல் கட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
அந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் 19 இடங்கள் பெற்றிருந்தது. 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக ஆகாஷ் அரசியல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார்.
சமூக வலைதளங்களில் கட்சியை பிரபலப்படுத்தினார். 2019 ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையம் மாயாவதியை 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதித்த ஒரு நாள் கழித்து, ஆகாஷ் மேடையில் ஏறி தனது முதல் பேரணியில் உரையாற்றினார்.
SP-BSP-RLD கூட்டணிக்கு வாக்களிக்குமாறு மக்களை வலியுறுத்தினார். SP தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் RLD தலைவர் அஜித் சிங் ஆகியோரும் மேடையில் அவருடன் இணைந்தார்.
கூட்டணி தோல்வியடைந்த சில வாரங்களுக்குப் பிறகு, மாயாவதி அவரை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமித்தார்.
அப்போது, இளைஞர்களை, குறிப்பாக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களை அணுகி, அவர்களை பகுஜன் சமாஜ் கட்சிக்குள் கொண்டு வருமாறு பணித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.